Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரும் ஆடுவார்.. இவரும் ஆடுவார்.. 2 வீரர்களை வைத்து கேம் ஆடும் கோலி.. இந்திய அணியில் என்ன நடக்கிறது?

லண்டன்: இந்திய அணிக்குள் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டு இருப்பதால் விஜய் சங்கர் அடுத்த போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக நிறைய கணிப்புகள் வெளியாகி இருக்கிறது.

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான தவான் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்தே விலகி இருக்கிறார். இவருக்கு விரலில் ஏற்பட்ட காயம் சரியாகாத காரணத்தால் போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார்.அந்த ஓவரில் நைல் வீசிய பவுன்சர் சரியாக தவானின் இடது கையில் உள்ள கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது. இந்த காயம்தான் அவர் போட்டியில் இருந்து விலக காரணமாகும்.

யார் வந்தார்

யார் வந்தார்

தவானுக்கு பதிலாக தற்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பிடித்து இருக்கிறார். தவானுக்கு காயம் ஏற்பட்ட போதே பண்ட் லண்டன் சென்றுவிட்டார். கடந்த ஒருவாரமாக பண்ட் இந்திய அணியுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்டுதான் வந்தார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் 11 பேர் கொண்ட விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணி எப்படி

இந்திய அணி எப்படி

தற்போது இருக்கும் இந்திய அணியில் ராகுல், ரோஹித் தொடக்க வீரர்களாக இருக்கிறார்கள். கோலி, பாண்டியா, தோனி அடுத்தடுத்து களமிறங்குகிறார்கள். அதன்பின் விஜய் சங்கர், கேதார் ஜாதவ் இறங்குகிறார்கள். அதன்பின் இந்திய அணியில் இருக்கும் இரண்டு ஸ்பீட் பவுலர்களும், ஸ்பின் பவுலர்களும் களமிறங்குகிறார்கள்.

மாற்றம் நடக்கும்

மாற்றம் நடக்கும்

ஆனால் இந்த ஆர்டரில் விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ் சரியாக ஆடுவதில்லை என்று புகார் இருக்கிறது. விஜய் சங்கர் மோசமாக பேட்டிங் செய்கிறார். ஆனால் அவரின் பவுலிங் நன்றாகவே இருக்கிறது. புவனேஷ்வர் குமார் இரண்டு போட்டிகளில் ஆட மாட்டார் என்பதால் விஜய் சங்கரின் சேவை தற்போது இந்திய அணிக்கு தேவை என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கேதார் ஜாதவ் இந்திய அணியில் ஏன் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவருக்கு பெரிதாக பேட்டிங் ஆடும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. அதேபோல் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் இருவருமே நன்றாக விளையாடுவதால், இவருக்கு பவுலிங் போடும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் ஜாதவை அணியில் இருந்து நீக்கிவிட்டு அதே இடத்தில் பண்ட் களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

செம

செம

பண்ட் பெரும்பாலும் விஜய் சங்கருக்கு முன்பாகவே பேட்டிங் ஆர்டரில் களமிறங்க வாய்ப்புள்ளது. இருவரையும் களமிறக்குவது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்று கோலி கருதுகிறார். அதன்படி இந்தியாவின் உத்தேச விளையாடும் அணி : கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, பாண்டியா, தோனி, பண்ட், விஜய் சங்கர், ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல் என்று கணிக்கப்பட்டுள்ளது .

Story first published: Thursday, June 20, 2019, 10:36 [IST]
Other articles published on Jun 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+