For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செமி பைனல் மாதிரி ஆக கூடாது.. உலகக் கோப்பை பைனலுக்கு சிக்கலா? போட்டி நடக்குமா நடக்காதா?

உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளது.

Recommended Video

WORLD CUP 2019 FINALS | இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

லண்டன்: உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளது.

கடைசியில் அந்த நாள் வந்துவிட்டது. ரோலர் கோஸ்டர் ரைடர் போல சென்ற உலகக் கோப்பை தொடர் இன்று முடிவிற்கு வருகிறது.

எல்லோரும் எதிர்பார்த்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடக்க உள்ளது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பைனல் போட்டி நடக்கிறது.

பிரச்சனை

பிரச்சனை

இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க அணிகளுக்கு முக்கிய பிரச்சனையாக இருந்த விஷயம் என்றால் அது மழைதான். ஆம், பல போட்டிகள் இந்த உலகக் கோப்பை தொடரில் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. முக்கியமான 4 போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டதும் புள்ளி பட்டியலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது.

செமி பைனல் போட்டி

செமி பைனல் போட்டி

அதேபோல் இந்தியாவின் செமி பைனல் போட்டியும் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. கடந்த செவ்வாய் கிழமை பெய்த மழையால் போட்டி பாதியில் தடைபட்டது. இதனால் புதன் கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அதில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.

இல்லை

இல்லை

இந்த நிலையில் இன்று உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று லண்டனில் மழை பெய்ய வாய்ப்பில்லை. நல்ல வெயில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. 22 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளது என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

அப்படியே நடந்தாலும்

அப்படியே நடந்தாலும்

போட்டி முழுக்கவே மழை அச்சுறுத்தல் கிடையாது. லண்டன் முழுக்கவே இன்று நல்ல வெயில் அடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது. ஒருவேளை இன்று மழை பெய்தாலும் நாளை மீண்டும் போட்டி விடப்பட்ட இடத்தில் இருந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 14, 2019, 10:44 [IST]
Other articles published on Jul 14, 2019
English summary
ICC World Cup 2019: Will rain affect Final match? The weather report on Lord's ground in London.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+