விக்கெட்டுகளை குவித்தும் கூட ஷமிக்கு வாய்ப்பில்லையா? கோலி சொன்ன அந்த பதில்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மிக முக்கியமான நாள். இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்து தோல்வியே காணாமல் விளையாடி வரும் அணி என்றால் அது இந்தியாதான். சொந்த மண்ணில் விளையாடுகிறோம் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்து விளையாடி வருகிறது.
இரண்டு அணிகளும் இன்று நேருக்கு நேர் மோத இருக்கிறது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

ஷமி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போதுதான் இந்திய பவுலர் புவனேஷ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அவர் பெரிதும் அவதிப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக இந்திய அணிக்குள் முகமது ஷமி கொண்டு வரப்பட்டார். கடந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணிக்காக அவர் விளையாடினார்.

ஆனால் என்ன
கடந்த இரண்டு போட்டியிலும் நான்கு நான்கு விக்கெட்டுகளை அவர் எடுத்தார். அவர் மொத்தம் 2 போட்டிகளில் 8 விக்கெட் எடுத்து சாதனை செய்துள்ளார். இதில் ஹாட் டிரிக் விக்கெட் ஒன்றும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவர் இந்திய அணி விளையாடும் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.

கோலி பேட்டி
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி அளித்த பேட்டியில், புவனேஷ்வர்குமார் மிக சிறந்த வீரர். அவர்தான் ஒருநாள் போட்டிகளில் எப்போதும் எங்களின் முதல் சாய்ஸ். அவர் உலகின் சிறப்பான பவுலர்களில் ஒருவர். ஷமி கடந்த ஒரு வருடங்களில் சிறப்பாக முன்னேறி இருக்கிறார். அவர் இவ்வளவு விக்கெட்டுகளை எடுத்து நான் பார்த்ததே இல்லை.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர்குமார் வேகமாக குணமடைந்து வருகிறார். நாளை அவர் உடல் தகுதியை நிரூபிக்க உள்ளார். அதன் பின்பாக அவரின் தேர்வு குறித்து முடிவு செய்வோம் என்று கோலி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் புவனேஷ்வர் குமார்தான் ஒருநாள் போட்டிகளில் எப்போதும் எங்களின் முதல் சாய்ஸ் என்று கோலி சொன்னதுதான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இல்லையா
இதனால் புவனேஷ்வர் குமார் திரும்பி வந்தால் ஷமி விளையாட மாட்டாரா? ஷமிக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஏற்கனவே புவனேஷ்வர் குமாருக்கு ஷமிக்கு இருப்பதை விட அதிக ஆதரவு பிசிசிஐயிடம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று ஷமி விளையாடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications