For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்களே சென்றிருக்க வேண்டும்.. உங்களுக்கு மனசாட்சி இல்லையா.. வில்லியம்சன் மீது கடும் விமர்சனம்!

நேற்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் செய்த தவறு ஒன்று பெரிய விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது.

Recommended Video

WORLD CUP 2019: SA VS NZ: கேள்விக்கு உள்ளாகும் டிஆர்எஸ்! சர்ச்சையில் வில்லியம்சன்,டி-காக்- வீடியோ

லண்டன்: நேற்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் செய்த தவறு ஒன்று பெரிய விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. நியூசிலாந்து கேப்டனுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தினமும் ஒரு சர்ச்சையாவது நிகழ்ந்து விடுகிறது. இப்படித்தான் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியும் சர்ச்சையாகி உள்ளது.

நேற்று நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணி 49 ஓவரில் 241 ரன்களை 6 விக்கெட் இழந்து எடுத்தது.

வெற்றி

வெற்றி

தொடர் தோல்விகளை அடுத்து எப்படியாவது கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நேற்று தென்னாபிரிக்கா அணி இந்த போட்டியில் விளையாடியது. கடைசி வரை இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களை எடுத்து வென்றது.

யார் உதவி

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கண்டிப்பாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்தான் காரணம் என்று கூட கூறலாம். நியூசிலாந்து அணி திணறிய போது வில்லியம்சன்தான் மிகவும் நிதானமாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நேற்று 138 பந்துகளில் இவர் 106 ரன்கள் எடுத்தார்.

ஆனால் என்ன

இந்த போட்டியில் நேற்று கேன் முன்பே அவுட்டாகி இருக்க வேண்டியது. இம்ரான் தாஹிர் தனது கடைசி ஓவரை வீசிய போது, பந்து லேசாக வில்லியம்சன் பேட்டில் உரசி கீப்பர் டி காக் கைக்கு சென்றது. பந்து பேட்டில் பட்ட சத்தம் நன்றாக எல்லோருக்கும் கேட்டது . ஆனால் இது உறுதியாக விக்கெட்டா என்று சந்தேகம் இருந்தது.

மைதானத்தில் குழப்பம்

மைதானத்தில் குழப்பம்

நடுவர் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் தாஹிர் டிஆர்எஸ் கேட்க சொன்னார். உடனே தென்னாபிரிக்கா கேப்டன் டு பிளசிஸ், டி காக்கிடம் விக்கெட்டா என்று கேட்டார். ஆனால் டி காக் வேண்டாம் என்ற கூறியதால் டிஆர்எஸ் கேட்கப்படவில்லை. ஆனால் பின் ரிப்ளேயில்தான் அது விக்கெட் என்று தெரிந்தது.

மோசம் பாஸ்

மோசம் பாஸ்

இதனால்தான் தற்போது வில்லியம்சன் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். என்ன இருந்தாலும் வில்லியம்சன் இப்படி செய்திருக்க கூடாது. விக்கெட்டா, இல்லையா என்பது அவருக்குத்தான் தெரியும். அவர் ஏன் தொடர்ந்து விளையாடினார் என்று சமூக வலைத்தளங்களில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

முன்னாள் கிரிக்கெட்டர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் பால் ஆடம்ஸ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஏன் வில்லியம்சன் அப்படி செய்தார், அவர் நான் விக்கெட் என்று கூறி நடந்து சென்று இருக்க வேண்டும். கோலி செய்தது போல. ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவருக்கு மனசாட்சி உறுத்தி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பதிலடி

பதிலடி

இதற்கு நியூசிலாந்து நாட்டு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதில் வில்லியம்சன் மிகவும் நேர்மையானவர். அவருக்கு உண்மையில் இப்படி பேட்டில் பந்து பட்டது தெரிந்திருக்காது. அதனால்தான் அவர் தொடர்ந்து ஆடினார் என்று ஆதரவாக பேசியுள்ளனர்.

Story first published: Thursday, June 20, 2019, 14:06 [IST]
Other articles published on Jun 20, 2019
English summary
ICC World Cup 2019: Williamson gets into controversy for walking off the ground in yesterday match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+