Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லோ அலர்ட் தந்துவிட்டனர்.. விரக்தியில் இந்தியா.. மகிழ்ச்சியில் நியூஸி. அணி.. பின்னணி என்ன?

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா இன்று மோதும் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்தியா நியூசிலாந்து அணிக்குள் இன்று உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மோதிக்கொள்கிறார்கள். உலகக் கோப்பை தொடரில் இன்று நடக்கும் போட்டி மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றால் இந்திய அணிக்கு அது பெரிய உதவியாக இருக்கும். இதன் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க முடியும்.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

இந்தியா மொத்தம் இரண்டு போட்டிகள்தான் விளையாடியது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று இருக்கிறது . இதனால் இந்திய அணி நான்காம் இடம் வகிக்கிறது.

நியூசிலாந்து எப்படி

நியூசிலாந்து எப்படி

அதே சமயம் உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி மிகவும் வலுவாக இருக்கிறது. நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வென்று இருக்கிறது. இதனால் அந்த அணி முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலியா அணி 4 போட்டியில் விளையாடி ஒன்றில் தோல்வி அடைந்து, இரண்டாம் இடம் வகிக்கிறது.

மழை பிரச்சனையை

மழை பிரச்சனையை

தற்போது இங்கிலாந்தில் மழை பெய்து வருகிறது. இங்கிலாந்து முழுக்க மிக மிக மோசமாக மழை பெய்து வருவதால் உலகக் கோப்பை போட்டி மிக மோசமாக தடை பட்டு இருக்கிறது. இதுவரை மொத்தம் மூன்று போட்டிகள் உலகக் கோப்பையில் இந்த முறை மழையால் கைவிடப்பட்டு இருக்கிறது. அங்கு தொடர்ந்து மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

மிக மோசம்

மிக மோசம்

இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. இதுதான் இந்திய வீரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ஏன் அதிர்ச்சி

ஏன் அதிர்ச்சி

அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கவில்லை என்றால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கும். இதனால் தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருக்க முடியும். ஆனால் இந்திய அணி புள்ளி பட்டியலில் ஒரு இடம் கூட முன்னேற முடியாது. இது இந்திய வீரர்களை விரக்திக்கு உள்ளாக்கி உள்ளது.

என்ன அலர்ட்

என்ன அலர்ட்

அதேபோல் தற்போது போட்டி நடக்க உள்ள நாட்டிங்காம் மைதானம் இருக்கும் பகுதிக்கு எல்லோ அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 80%க்கும் கண்டிப்பாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கணித்து இருக்கிறார்கள். பெரும்பாலும் இன்றைய போட்டி இதனால் தடை பட வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, June 13, 2019, 11:34 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+