Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தயவு செய்து ஓய்வு பெறுங்கள்.. அதுதான் டீமிற்கு நல்லது.. இளம் இந்திய வீரருக்கு இப்படி ஒரு நிலைமையா?

Recommended Video

Dhoni Retirement : ஓய்வு முடிவை அறிவிக்க தோனிக்கு பிசிசிஐ நெருக்கடி?- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரை ஓய்வு பெற வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

உலகக் கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பின் இந்திய வீரர்கள் சிலர் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகி உள்ளனர். ரோஹித், கோலி போன்ற வீரர்களுக்கு இப்போதும் ரசிகர்களின் ஆதரவு அப்படியேதான் இருக்கிறது.

ஆனால் உலகக் கோப்பை தொடரில் சரியாக ஆடாத இந்திய அணியை சேர்ந்த மிடில் ஆர்டர் வீரர்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதில் ஒரு வீரர்தான் விஜய் சங்கர்.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் விஜய் சங்கர் உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். கால் விரலில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

பெரிய ஏமாற்றம்

பெரிய ஏமாற்றம்

உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடிய போட்டிகளில் எல்லாம் விஜய் சங்கர் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்தார். தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நிரூபிக்காமல் விட்டுவிட்டார். இவர் பவுலிங்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. பீல்டிங்கிலும் அடிக்கடி தவறு செய்தார். இதனால் இவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

என்ன டிவிட்

இந்த நிலையில் விஜய் சங்கர் உலகக் கோப்பை தொடர் குறித்து தற்போது டிவிட் செய்துள்ளார். அதில், நாங்கள் இந்த உலகக் கோப்பை தொடரை பெருமையுடனும், கனவுகளுடனும் விளையாடினோம். எங்களுக்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும் நன்றி, என்று குறிப்பிட்டுள்ளார்.

பலர் கிண்டல்

இந்த டிவிட்டை வைத்து பலர் விஜய் சங்கரை கிண்டல் செய்து வருகிறார்கள். நீங்கள் ஏன் இப்படி டிவிட் செய்கிறீர்கள், நீங்கள் கொஞ்சம் சரியாக ஆடி இருக்கலாம். உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை மிஸ் செய்துவிட்டீர்கள். நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதுதான் இந்திய அணிக்கு நல்லது என்று சிலர் டிவிட் செய்துள்ளனர்.

இன்னும் சிலர்

அதே சமயம் இன்னும் சிலர் விஜய் சங்கர் மிகவும் இக்கட்டான நிலையில் இந்திய அணிக்காக ஆடினார். இளம் வீரருக்கு அப்படித்தான் அழுத்தம் இருக்கும். அவர் போக போக சரியாக ஆடுவார். அவரை கிண்டல் செய்வது தவறான விஷயம் என்று கூறி வருகிறார்கள்.

Story first published: Tuesday, July 16, 2019, 11:30 [IST]
Other articles published on Jul 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+