Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் இப்படி இருக்கீங்க.. இன்னும் அந்த கோபம் போகவில்லையா.. ஓய்விற்கு பின் சர்ச்சைக்கு உள்ளான யுவராஜ்!

Recommended Video

Yuvaraj singh about Dhoni : ஓய்விற்கு பிறகும் சர்ச்சைக்கு உள்ளான யுவராஜ்!- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இணையத்தில் இவருக்கு எதிராக சிலர் காலையில் இருந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவராக இருந்தவர் யுவராஜ் சிங். 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

ஆனால் கேன்சர் மூலம் பாதிக்கப்பட்டவர் அதன்பின் சரியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. இந்த நிலையில் சென்ற மாதம் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

வாய்ப்பு வழங்கப்படவில்லை

வாய்ப்பு வழங்கப்படவில்லை

இவர் கேன்சர் பாதிக்கப்பட்ட பின் இந்திய அணியில் சரியாக வாய்ப்பு பெற முடியவில்லை. கிடைத்த வாய்ப்பையும் கூட இவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் இவரின் வாய்ப்பு பறி போனதற்கு பின் தோனியும் முக்கியமான ஒரு காரணம் என்று சில கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருவது வழக்கமாக உள்ளது.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் நேற்று தோனி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் முன்னாள் வீரர்களும் கூட தோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று இல்லை

ஆனால் நேற்று யுவராஜ் சிங் மட்டும் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மாறாக இன்று பிறந்த நாள் கொண்டாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு யுவராஜ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக யுவராஜ் சிங் டிவிட் செய்து இருந்தார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஏன் நேற்று யுவராஜ் தோனிக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஏன் அவர் இப்படி இருக்கிறார். இன்னும் தோனி மீது யுவராஜுக்கு கோபம் இருக்கிறதா. இன்னும் இருவருக்கும் இடையில் பிரச்சனை நிலவி வருகிறதா, ஏன் அவர் இப்படி கோபத்துடன் நடந்து கொள்கிறார் என்று பலர் கேட்டு இருக்கிறார்கள்.

Story first published: Monday, July 8, 2019, 16:26 [IST]
Other articles published on Jul 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+