அவருக்கு நேர்ந்ததை ஏற்க முடியாது.. இந்திய அணி மீதுதான் தவறு.. புதிய குண்டை போடும் யுவராஜ் சிங்!
Recommended Video
லண்டன்: இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை செமி பைனல் போட்டி நடந்தது. இந்த தொடர் முழுக்க இந்திய அணிதான் உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தியது.
யாராலும் வெல்ல முடியாத அணியாக இந்திய அணி திகழ்ந்தது. ஆனால் முக்கியமான நேரத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய காரணத்தால் இந்தியா தோல்வி அடைந்தது.

என்ன பேட்டி
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து யுவராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணி மீதும் தேர்வுக்குழு மீதும்தான் தவறு இருக்கிறது. அவர்கள்தான் 4வது இடத்தில் ஆடுவதற்கு சரியான வீரரை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. ஒரு நல்ல வீரரை தேர்வு செய்து வளர்த்திருக்க வேண்டும்.

என்ன சொன்னார்
அவர்கள் எப்படி அம்பதி ராயுடுவை நீக்கினார்கள் என்று தெரியவில்லை. அம்பதி ராயுடுவிற்கு நேர்ந்ததை ஏற்க முடியாது. அவர் நன்றாக ஆடிக்கொண்டு இருந்தார். நியூசிலாந்தில் அவர் சிறப்பாக ஆடினார். ஆனால் அவர் இரண்டு மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றதும் நீக்கிவிட்டனர்.

யார் காரணம்
அதேபோல்தான் பண்டும். அவர் நன்றாக ஆடினார். ஆனால் கொஞ்சம் சொதப்பியதும் மீண்டும் அணியில் இருந்து நீக்கிவிட்டனர். ஒருநாள் அணியில் 4வது இடம் என்பது மிகவும் முக்கியமான இடம். அங்கு விளையாடும் வீரர்களை அணி நிர்வாகம் நம்ப வேண்டும். ஒரு போட்டியில் சொதப்பினார் என்றால் உடனே மாற்ற கூடாது.

என்ன வேண்டும்
அந்த இடத்தில் ஆடும் வீரர்களை அணி நிர்வாகம் ஊக்குவிக்க வேண்டும். ஆனால் அதை இந்திய அணி செய்யவில்லை. 2003ல் நாங்கள் நியூஸிலாந்திற்கு எதிராக மோசமாக ஆடினோம். ஆனால் எங்களை நம்பி உலகக் கோப்பைக்கு அனுப்பினார்கள். அப்போது நாங்கள் இறுதிப்போட்டி வரை சென்றோம் என்பதை மறக்க வேண்டாம் என்று யுவராஜ் சிங் பேட்டி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications