தோனி நம்மை கரை சேர்ப்பார்.. நம்பிக்கை இருக்கிறது.. இவரா இப்படி சொல்வது.. என்ன ஆச்சர்யம்!
லண்டன்: இந்திய அணியை தோனி கரை சேர்ப்பார் என்று நம்புகிறேன் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து திணறி திணறி மிகவும் மோசமாக ஆடியது. இன்று மைதானம் அப்படியே பவுலிங் பிட்சாக மாறி இருப்பதால் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள்.
50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை நியூசிலாந்து அணி அடித்தது. இந்தியா 6 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

என்ன சர்ச்சை
இந்த போட்டியில் தோனி மிகவும் தாமதமாக களமிறங்கியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோலி அவுட்டான பின் களமிறங்க வேண்டிய தோனி களமிறங்கவில்லை. தோனிக்கு பதிலாக பாண்டியா களமிறங்கி ஆடினார். ஆனால் அவரும் அவுட்டானார்.

என்ன சொன்னார்
இந்த நிலையில் தோனி சீக்கிரமே களமிறங்காதது குறித்து கங்குலி ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணி மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இன்னும் ஏன் தோனி வெளியே வரவில்லை. இதுதான் அவர் வெளியே வருவதற்கான சரியான நேரம். ஆனால் ஏன் இன்னும் அவர் களமிறங்கவில்லை என்று கங்குலி கேட்டு இருந்தார்.

யுவராஜ் என்ன
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது யுவராஜ் சிங்கும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அதிக அழுத்தம் இருக்கும் போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆட வேண்டும். அவர்கள் சரியாக சிங்கிள் எடுக்க வேண்டும். அதுதான் அப்போது தேவை. ஆனால் நாம் அதை செய்யவில்லை.

தோனி
இந்திய அணி கஷ்டப்படும் போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆட வேண்டும். இதற்குத்தான் அனுபவம் தேவை. தோனி நம்மை கரை சேர்ப்பார் என்று நம்புகிறேன், என்று யுவராஜ் சிங் டிவிட் செய்துள்ளார். இவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications