Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பை அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் செல்வது கடினம்.. ஏன் தெரியுமா? 4 முக்கிய காரணங்கள்

ஐதராபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் வியாழக்கிழமை முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில் 10 முக்கிய அணிகள் பங்கேற்கிறது. ரவுண்டு ராபின் முறைப்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும்.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் ஒன்பது ஆட்டங்கள் விளையாடும். இதில் வெற்றி பெற்று பெரும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

ICC World cup 2023 -4 Reason Pakistan might not qualify for semi finals

இதில் அரையிறுதி சுற்றுக்கு செல்ல போவது யார் என்று சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு வரை பாகிஸ்தான் மீது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்பு இருந்தது. ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் கூட பாகிஸ்தானில் இருந்தது. ஆனால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான அணி படுதோல்வியை தழுவியதால் அந்த அணியின் உத்வேகம் கடுமையாக பாதித்திருக்கிறது.

பயிற்சி ஆட்டத்தில் 345 ரன்கள் அடித்தும் அந்த அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஏன் அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியாது என்ற காரணங்களை தற்போது பார்க்கலாம்.பாகிஸ்தான் அணியின் பலமே வேகப்பந்து வீச்சு தான். பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி, ஹரிஷ் ரவுப் என்ற மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை நம்பி அந்த அணி கட்டமைக்கப்பட்டது. இதில் தற்போது நசீம் ஷா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிவிட்டார். மேலும் ஹரிஷ் ரவுப் காயத்திலிருந்து தற்போது திரும்பி இருப்பதால் அவராலும் 100% சிறப்பாக பந்து வீச முடியவில்லை.

ஹசன் அலி நீண்ட நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு திரும்பி இருக்கிறார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் இருக்கும் இன்னொரு பிரச்சனை தலைச்சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாததுதான். ஒவ்வொரு அணியிலுமே தற்போது உலக தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியில் சதாப்கான், இப்திகார் அஹமத் என இருவர் மட்டுமே இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் சுழற் பந்துவீச்சாளர்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுக்காதது தான்.
முக்கிய காரணம் சுழற் பந்துவீச்சாளர்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுக்காதது தான்.

இதேபோன்று பாகிஸ்தான் அணியில் இருக்கும் முக்கிய பிரச்சனை அந்த அணியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடுவதில்லை. தொடக்க வீரர்களும் தற்போது பார்ம் அவுட் ஆகி இருக்கிறார்கள். மேலும் நடுவரிசை வீரர்கள் அனுபவம் குன்றி இருக்கிறார்கள்.

இது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். இது போன்று பாகிஸ்தானில் இருக்கும் இன்னொரு மைனஸ், அவர்கள் யாரும் இந்தியாவில் இதற்கு முன்பு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இரண்டு வீரர்களை வரை தவிர மற்ற அனைவரும் இந்தியாவில் தங்களுடைய முதல் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட உள்ளனர். இது மிகப்பெரிய பிரச்சனையை அந்த அணிக்கு கொடுக்கும்.

Story first published: Tuesday, October 3, 2023, 14:32 [IST]
Other articles published on Oct 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+