Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலககோப்பை முதல் வாரத்தில் டாப் கிளாஸ் 5 போட்டிகள்.. ரசிகர்களுக்கு விருந்து உறுதி

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி வரும் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 அணிகள் தங்களுக்குள்ளே ரவுண்டு ராபின் முறைப்படி மோதிக் கொள்ளும்.

இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி இறுதி சுற்ற்கு செல்லும். இந்த நிலையில் இந்த தொடரின் முதல் வாரத்திலேயே ரசிகர்களை குதூகலப்படுத்தக்கூடிய ஐந்து டாப் கிளாஸ் போட்டிகள் நடைபெறுகிறது.அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

ICC World cup 2023 - 5 Biggest Matches in first week of the schedule

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்திலேயே நியூசிலாந்தும் இங்கிலாந்து அணியும் அகமதாபாத்தில் பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் குதூகலமாக இருக்கும். ஏனென்றால் கடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் தான் மோதினார்கள். இதனால் இங்கிலாந்தை பழி தீர்க்க நியூசிலாந்து முதல் ஆட்டத்திலேயே களமிறங்குகிறது.

இதை அடுத்து அக்டோபர் ஏழாம் தேதி சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் டெல்லியில் பலப்பரிட்சை நடத்துகிறது. ஆசிய மைதானங்களில் இலங்கையை வீழ்த்துவது கடினம் என்றாலும் தென்னாப்பிரிக்காவையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் எட்டாம் தேதி இந்தியா தங்களுடைய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி நமது சென்னையில் நடைபெறுகிறது. வெற்றியுடன் தொடரை தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். இதேபோன்று வரும் அக்டோபர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதிக் கொள்வது நிச்சயம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

இதேபோன்று வரும் வியாழக்கிழமை 12ஆம் தேதி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்கா அணிகளும் லக்னோவில் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் பிரியாணி விருந்தாக அமையும். இப்படி முதல் வாரத்திலேயே பிளாக்பஸ்டர் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதனை disney hotstar லும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் நேரலையில் பார்க்கலாம்.

Story first published: Wednesday, October 4, 2023, 5:40 [IST]
Other articles published on Oct 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+