Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பை கிரிக்கெட்.. பிசிசிஐ 500 கோடி தருகிறது.. பளிச்சென்று மாற போகும் சேப்பாக்கம் மைதானம்

மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான அட்டவணை அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள பிரதான மைதானங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பிசிசிஐ உலகக் கோப்பை தொடருக்காக மைதானங்களில் உள்ள வசதியை மேம்படுத்துவதற்காக 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இதன்படி ஒவ்வொரு மைதானத்திற்கும் தலா 50 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானம் தற்போது தான் புனரமைக்கப்பட்டது. இந்த வகையில் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் முயற்சி நடைபெற உள்ளது. மேலும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் செம்மண்களைக் கலந்த ஆடுகளத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ICC World cup 2023 - BCCI allocates 500 crores for 10 world cup venues

இதேபோன்று தர்மசாலாவில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழை பெய்தால் தண்ணீர் விரைவாக வெளியேறுவதற்கு அதிநவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு புல் தரைகள் அமைக்கப்பட உள்ளன. இது போன்று புனேவில் பார்வையாளர்கள் மாடத்தில் உள்ள மேற்கூரை மாற்றப்படுகிறது. இதேபோன்று மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்ற டெல்லி மைதானத்திற்கு முக்கிய கவனங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று தர்மசாலாவில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழை பெய்தால் தண்ணீர் விரைவாக வெளியேறுவதற்கு அதிநவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு புள் தரைகள் அமைக்கப்பட உள்ளன. இது போன்று புனேவில் பார்வையாளர்கள் மாடத்தில் உள்ள மேற்கூரை மாற்றப்படுகிறது. இதேபோன்று மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்ற டெல்லி மைதானத்திற்கு முக்கிய கவனங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் பார்வையாளர்களுக்கான கழிவறை வசதி, பார்வையாளர் அமர்வதற்கான இருக்கைகள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க சிறப்பு ஏற்பாடு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோன்று லக்னோவில் உள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தில் ஆடுகளம் சர்ச்சைக்கு உள்ளானது. ஐபிஎல் தொடரில் முற்றிலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், புதிய ஆடுகளம் உலகக் கோப்பை தொடருக்காக அமைக்கப்படுகிறது. இதேபோன்று ஹைதராபாத்தில் உள்ள ஆடுகளத்தில் மேற்கூரைகளும் மாற்றப்படுகிறது.

Story first published: Friday, June 30, 2023, 13:39 [IST]
Other articles published on Jun 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+