Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலககோப்பை - அப்படி வாங்க வழிக்கு! அடிச்ச அடியில் சரண்டர் ஆன பிசிசிஐ.. டிக்கெட் குறித்து முடிவு

மும்பை : 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இந்த போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டத்தை அகமதாபாத்தில் பார்க்க ரசிகர்கள் லட்சக்கணக்கில் செலவழித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

icc world cup

இந்த போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் கள்ளச் சந்தையில் ஒரு டிக்கெட்டின் விலை 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக புகார் எழுந்தது
இதனை எடுத்து ரசிகர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தார்கள். மேலும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் வந்து போட்டியை பார்க்க முடியாமல் போய்விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த முறை இங்கிலாந்து நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியை எந்த சிக்கலும் இன்றி பார்த்ததாகவும் ஆனால் தற்போது வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு விட்டதாகவும் ரசிகர்கள் கடுமையாக பிசிசிஐ யை சாடி வந்தனர்.மேலும் உலகக்கோப்பையை நடத்த தெரியாமல் பி சி சி ஐ கெடுத்து விட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த நிலையில் பிசிசிஐ தற்போது ஒரு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டு இருக்கிறது. இதில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள பகுதி பகுதியாக டிக்கெட்டுகளை விற்பனைக்கு வழங்க முடிவெடுத்திருப்பதாக பி சி சி ஐ கூறியுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் எட்டாம் தேதி அனைத்து போட்டிகளுக்கும் சேர்த்து நான்கு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனைக்கு விட உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் முன்கூட்டியே ஐசிசி இணையதளத்திற்கு சென்று டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் பி சி சி ஐ யை கூறியுள்ளது. ரசிகர்களை தாங்கள் மிகவும் மதிப்பதாகவும் இந்த தொடரின் இதயத்துடிப்பே ரசிகர்கள் தான் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ள பிசிசிஐ இந்த உலகக் கோப்பையை வெற்றிகரமாக மாற்றுவது ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளது. இதேபோன்று அடுத்த டிக்கெட் விற்பனையில் மேலும் உள்ள டிக்கெட்டுகள் விற்கப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

Story first published: Thursday, September 7, 2023, 7:00 [IST]
Other articles published on Sep 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+