For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீடியோ - சென்னை மக்கள் vs அகமதாபாத் மக்கள் - பகை நாட்டை மதித்த தமிழர்கள்.. பாகிஸ்தானே மறக்காத தருணம்

அகமதபாத் : உலக கிரிக்கெட்டில் மிகவும் அறிவு சார்ந்த ரசிகர்களுடைய ஊர் என்றால் அது நமது சென்னை தான். நீங்கள் எந்த அணியாக இருந்தாலும் சரி திறமையை வெளிப்படுத்தினால் அவர்களை பாராட்டி உற்சாகம் கொடுப்பது சென்னை மக்களின் இயல்பு.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கூட சென்னையில் பெரும்பான்மையான போட்டிகளில் விளையாட தான் ஆசைப்பட்டது. ஏனென்றால் அந்த அளவுக்கு சென்னை மக்கள் பாகிஸ்தான் அணிக்கு விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை காட்டியிருக்கிறார்கள்.

ICC World cup 2023 - Chennai vs Ahmedabad fans - Look at the reception pakistan gets

இதே போல் ஹைதராபாதிலும் பாகிஸ்தானுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு சொல்ல முடியாத அளவுக்கு மனக்கஷ்டங்கள் ஏற்பட்டது. குறிப்பாக வீரர்களை நோக்கி எதிர்ப்பு குரல் கொடுப்பது, பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்புவது என மத ரீதியான பிரச்சனைகளை பாகிஸ்தான் அணியினர் எதிர் கொண்டனர்.

ஆனால் 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்து தோல்வியை தழுவியது.அப்போது பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான முறையில் பந்து வீசினார்கள். இதனை பாராட்டும் வகையில் பாகிஸ்தான் அணியினருக்கு எழுந்து நின்று ஸ்டாண்டிங் அவேஷன் எனப்படும் கைதட்டினார்கள். இதனை கொஞ்சம் கூட பாகிஸ்தான் அணியினர் எதிர்பார்க்கவில்லை.

இது குறித்து பேசும் போது கூட பாகிஸ்தான் அணிக்கு சென்னை ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம் மிகவும் நன்றி என்று கூறியிருந்தார். மேலும் சென்னை ரசிகர்களை மரியாதை செலுத்தும் விதமாக பாகிஸ்தான் அணியினர் மைதானத்தை சுற்றி வந்தார்கள். இந்தியா பாகிஸ்தான் பகை உச்சகட்டத்தில் இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது.

அப்போதே பாகிஸ்தான் அணியினருக்கு நமது தமிழக ரசிகர்கள் மரியாதையும் மதிப்பையும் உற்சாகத்தையும் கொடுத்தார்கள். ஆனால் தற்போது பாகிஸ்தான் அணிக்கு நேர்ந்த அவமானத்தை பார்க்கும் போது சாதாரண ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் சென்னையில் விளையாடுகிறது. அப்போது பாகிஸ்தானுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க சென்னை ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Story first published: Sunday, October 15, 2023, 13:16 [IST]
Other articles published on Oct 15, 2023
English summary
ICC World cup 2023 - Chennai vs Ahmedabad fans - Look at the reception pakistan gets வீடியோ - சென்னை மக்கள் vs அகமதாபாத் மக்கள் - பகை நாட்டை மதித்த தமிழர்கள்.. பாகிஸ்தானே மறக்காத தருணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+