”ரொம்ப கெட்டப்பையன் சார் இந்த ஷமியும், சிராஜும்” இலங்கையை மிரட்டிய இந்தியா.. தெறிக்கும் மீம்ஸ்!
மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்தார். இதனால் முதலிடத்தில் இருந்த ஜாகீர் கான் மற்றும் ஸ்ரீநாத் இருவரும் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை லியோ படத்தில் விஜய் புகைப்படத்தை உடைத்து பார்க்கும் அர்ஜுனை அப்படியே மாற்றி, அர்ஜுனுக்கு பதிலாக ஸ்ரீநாத், போட்டோ பிரேமை உடைத்து பார்க்கும் போது ஷமியின் முகம் இருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் Badass ரகம்.

உலகக்கோப்பை வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். இதனை வேங்கை படத்தில் தன் மகனான தனுஷை வெட்ட ஆட்களை அனுப்பும் பொன்னம்பலத்திடம் நடிகர் ராஜ்கிரம், என் பையன் மேல ஒருத்தனோட கை பட்டாலும், திருச்சியில் இருக்கும் ஒவ்வொரு ரவுடியையும் அறுத்திவிடுவேன் என்று மிரட்டுவார். அதனை முகமது ஷமிக்கு ஏற்றார் போல் மாற்றி, "உலகக்கோப்பையில் என் அணி மேல எவன் கையாச்சும் பட்டுச்சு, ஒட்டுமொத்த டீமையும் கருவறுத்துறுவேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் தல, தளபதி ரசிகர்கள் இருவரும் இணைந்து சந்தானத்தை வெளுத்து கட்டுவார்கள். அதுபோல் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இலங்கை அணியின் பவுலர்களையும், பவுலர்கள் அனைவரும் சேர்ந்து இலங்கை அணி பேட்ஸ்மேன்களை 55 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலி ரகம்.

நேற்றைய ஆட்டத்தில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஷமி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை கலகலப்பு படத்தில் சந்தானமும், விமலும் மாற்றி வசனம் பேசி மனோபாலாவுக்கு பீதியை கொடுப்பார்கள். அதனை மாற்றி, பவர்பிளே பேட்ஸ்மேன எப்படி திணற வைக்கிறதுனு இவனை வச்சு டெமோ காட்டுறேன் பார்க்குறியா என்று சிராஜ் கேட்பது போலவும், அதற்கு ஷமி, முதல் மாற்று பவுலரா வந்தாலும் எப்படி டக்குனு 5 விக்கெட்டுகள் எடுக்குறதுனு நான் காட்டுகிறேன் பார்க்குறியா என்று சொல்வது போலவும், அதற்கு இலங்கை அணி அதிர்ச்சியாவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.


Click it and Unblock the Notifications