Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது எல்லாம் பகல் கொள்ளை.. விமான கட்டணம் 415% உயர்வு.. இந்தியா, பாக். போட்டி பயன்படுத்தி அட்டூழியம்

ஐசிசி உலக கோப்பையில் அனைவருமே எதிர்பார்க்கக் கூடிய போட்டி என்றால் அது இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் லீக் ஆட்டம் தான். இது அகமதாபாத்தில் வரும் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கு டிக்கெட் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்த போட்டியை பார்க்க வேண்டும் என்றால் உங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே முடியும் என்ற ஒரு சூழல் தற்போது உருவாகிவிட்டது.

ICC World cup 2023 - India Pakistan match air fare rises up to 415 percent

ஏற்கனவே அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் ஒரு நாள் வாடகை 80 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி விட்டது. இந்த நிலையில் அகமதாபாத்திற்கு விமானத்தில் செல்லலாம் என்று எதிர்பார்த்து ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சி காத்திருக்கிறது. அக்டோபர் 13, 14 ,15 ஆகிய தேதிக்கு இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து நீங்கள் அகமதாபாத் போக திட்டமிட்டாலோ அதன் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.

குறிப்பாக சாதாரண நாட்களில் சென்னையிலிருந்து அகமதாபாத்துக்கு செல்ல 12000 ரூபாய் ஆகும் அதுவே இந்தியா பாகிஸ்தான் போட்டி அன்று சென்னையிலிருந்து அகமதாபாத் செல்ல 29,33 ரூபாய் என்ற அளவிற்கு விமான டிக்கெட் விலை 144 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல் பெங்களூரில் இருந்து சாதாரண நாட்களில் 12 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆனால் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நீங்கள் புக் செய்தால் 28,855 ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது.

அதிகபட்சமாக சந்திகாரில் இருந்து அகமதாபாத் செல்ல 8,500 தான் சாதாரண நாட்களில் ஆகும். ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இது 43 ஆயிரத்து 833 ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது.இது 415 சதவீதம் உயர்வாகும். இதனால் குறைந்தது உங்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் தான் அகமதாபாத்திற்கு சென்று இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண முடியும். இந்த போட்டியை வைத்து எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அந்த வகையில் அனைத்து வணிகர்களும் சம்பாதிக்க பிளான் போட்டு விட்டார்கள்.

இதன் மூலம் வியாபாரம் அதிகரித்து லாபம் அடைந்தாலும் எளிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய சோகத்தையே கொடுக்கும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவ்வளவு காசு கொடுத்து டிக்கெட்டை பல ரசிகர்களும் புக் செய்து விட்டார்கள். இதனால் கூடுதல் விமானத்தை அகமதாபாத்திற்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Story first published: Friday, September 22, 2023, 0:01 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+