மும்பை : 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அணியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் சொந்த மண்ணில் விளையாடிய இந்திய அணி இறுதி போட்டிக்கு எவ்வாறு வந்தது.
இந்தியா கடந்து வந்த பாதை என்ன என்பதை தற்போது பார்க்கலாம். 10 அணிகளும் தங்களுக்குள் ரவுண்ட் ராபின் முறைப்படி லீக் ஆட்டத்தில் விளையாடினார்கள். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இந்தியா இந்த லீக் சுற்றில் முதல் முறையாக பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அப்போது முதல் சில ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி ராகுலின் அபார ஆட்டத்தால் அந்த போட்டியில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி ரோகித் சர்மாவின் அபார சதத்தால் எளிதில் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து தங்களுடைய மூன்றாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. இதில் பாகிஸ்தான் 191 ரன்கள் சுருண்டது. இதை அடுத்து இந்தியா எளிதில் வெற்றியை பெற்றது. நான்காவது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொண்டது. இதில் விராட் கோலி அபாரமாக சதம் அடித்தார். இதனை அடுத்து ஐந்தாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொண்டது.
இதிலும் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தான் முகமது சமி முதல் முறையாக இந்த உலகக் கோப்பையில் விளையாடி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்பிறகு லக்னோவில் நடைபெற்ற ஆறாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொண்டது.
இதில் பேட்டிகள் தடுமாறிய இந்தியா 229 ரன்கள் தான் சேர்த்தது. இதனை அடுத்து பந்து வீசிய இந்திய அணியில் முகமது சமி அபாரமாக செயல்பட்டு நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 129 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்த இடத்தில் ஏதாவது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் மோதியது. இதில் இந்தியா 357 ரன்கள் விளாசி இலங்கை அணி 55 ரன்களில் தோல்வியை தழுவியது.
இதன் பிறகு எட்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவில் தென்னாபிரிக்காவை இந்தியா எதிர்கொண்டது. இதில் விராட் கோலி அபாரமாக சதம் அடிக்க இந்திய அணி 326 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 83 ரன்களின் தோல்வியை தழுவியது. இதையடுத்து பெங்களூருவில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்டு 410 ரன்கள் குவிக்க நெதர்லாந்து அணி 250 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது. இதனை அடுத்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது முதல் அணியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.