For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆப்கானிஸ்தானை பார்த்து திருந்துங்க.. இந்தியா செய்யும் ஒரே தவறு.. மாற்றி கொள்வாரா ரோகித்?

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மேற்கொள்ளும் யுக்தியை இந்தியா பயன்படுத்த வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக நடைபெறும் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடி வருகிறது. இதேபோன்று இங்கிலாந்து அணி கூட தங்களது பிளேயிங் லெவனில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துகிறார்கள்.

ICC World cup 2023 - India should learn from the afghanistan strategy

ஆனால் இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளாக வெறும் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துதான் விளையாடுகிறார்கள். தமிழக வீரர் அஸ்வினுக்கு பதிலாக சர்துல் தாக்கூர் என்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை இந்திய அணி சேர்த்துக் கொள்கிறது. ஆனால் கடந்த போட்டியில் வெறும் இரண்டு ஓவர்கள் தான் வீசினார். அதில் அவர் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இந்த நிலையில் இரண்டு ஓவர் வீசுவதற்கு பதிலாக அந்த இடத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை சேர்த்துக் கொண்டால் இந்திய அணிக்கு மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் இந்தத் திட்டத்தை இந்திய அணி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது என்பது வேடிக்கையான விஷயமாக இருக்கிறது.

இதனால் இனிவரும் போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மை எவ்வாறு இருந்தாலும் தமிழக வீரர் அஸ்வினை நீக்க கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தங்களுடைய மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் திட்டத்தில் தெளிவாக இருக்கும் நிலையில் அதனை இந்தியாவும் பாலோ செய்ய வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அஸ்வின் பேட்ஸ்மேன் என்பதால் அது இந்திய அணிக்கு கூடுதல் வலுவை தான் சேர்க்கும். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான அடுத்த போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

Story first published: Monday, October 16, 2023, 15:20 [IST]
Other articles published on Oct 16, 2023
English summary
ICC World cup 2023 - India should learn from the afghanistan strategy ஆப்கானிஸ்தானை பார்த்து திருந்துங்க.. இந்தியா செய்யும் ஒரே தவறு.. மாற்றி கொள்ளுவாரா ரோகித்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+