லக்னோ : உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ரன் வேட்டை இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த போட்டிகளில் ஒன்று ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதும் போட்டி ஆகும். ஆனால், இது வார நாட்களில் நடைபெறுவதால், ரசிகர்களால் போட்டியை காண முடியவில்லை.
மைதானத்திலும் போதிய அளவு ரசிகர்கள் இல்லாததால், எதோ வேறு கிரகத்தில் போட்டி நடந்தது போல் இருந்தது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் முதலில் பேட்டிங் செய்து சதம் அடித்தார்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடிய போது தான் இந்த சம்பவம் ஒன்று நடந்தது.
அதாவது, ஆஸ்திரேலிய அணி மார்கஸ் ஸ்டோனிஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில், ரபாடா பந்துவீச்சில் ,ஆட்டமிழந்தார். இடது புறம் சென்ற பந்தை மார்கஸ் ஸ்டோனிஸ் லீவ் செய்ய போது, அந்த பந்து, மார்கஸ் ஸ்டோனிசின் இடது கையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. முதலில் இதற்கு கள நடுவர் அவுட் வழங்க வில்லை.
இதனையடுத்து, மூன்றாம் நடுவர் உதவியை தென்னாப்பிரிக்க வீரர்கள் நாடினர். அதில் பந்து ஸ்டோனிசின் கையில் பட்டு சென்றத உறுதியானது. இதனையடுத்து, இதற்கு மூன்றாம் நடுவர் அவுட் வழங்கினார். ஆனால், இந்த முடிவை ஏற்காத ஸ்டோனிஸ், கள நடுவரிடம் இது அவுட் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
தமது கையில் பந்து பட்டாலும், அப்போது பேட்டில் இருந்து என் இடது கையை எடுத்து விட்டதாகவும், பேட்டில் இடது கை இல்லாத நிலையில், அதற்கு எப்படி அவுட் தரலாம் என்று ஸ்டோனிஸ் வாதிட்டார். ஸ்டோனிசின் வாதத்தில் நியாயம் இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்ளும் கூறினர். ஆனால் மூன்றாம் நடுவர் இதற்குஅவுட் வழங்கி விட்டதால், கடும் மன உளைச்சலில் ஸ்டோனிஸ் பெவிலியன் சென்றார்.