Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்றை மாற்றிய முகமது ஷமி.. யாரும் தொட முடியாத சாதனை.. 14 இன்னிங்ஸ்களில் காலியான ரெக்கார்ட்!

மும்பை: உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் 33வது லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் விளாசினர்.

ICC World Cup 2023: Mohammad Shami becomes the Highest Wicket taker for India in the World Cup history

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வெறும் 19.4 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 7லும் வென்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் முகமது ஷமி 3வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலமாக அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மிட்செல் ஸ்டார்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள வீரர்களில் அதிகபட்சமாக 23 இன்னிங்ஸ்களில் விளையாடி ஜாகீர் கான் 44 விக்கெட்டுகளையும், 33 இன்னிங்ஸ்களில் விளையாடி ஜவஹல் ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் முகமது ஷமி 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி, 2019 உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது 3 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி, மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் முகமது ஷமி மிரட்டலான சாதனையை படைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

Story first published: Thursday, November 2, 2023, 20:55 [IST]
Other articles published on Nov 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+