ICC World cup schedule 2023 - புதிய அட்டவணையில் இந்தியாவின் 2 போட்டிகள் மாற்றம்.. சாதகமா? பாதகமா?
மும்பை : 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் சிலவற்றை பிசிசிஐ மாற்றி இருக்கிறது.
அதன்படி மொத்தம் இரண்டு போட்டிகளை புதிய அட்டவணைப்படி இந்தியா வேறு தேதிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்தியா விளையாடும் முழு போட்டி விவரத்தையும் இதில் பார்க்கலாம்.

இந்தியா தனது முதல் வழிகாட்டுதலை அக்டோபர் 8ம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது. இதனை அடுத்து இரண்டு நாட்கள் இடைவெளியில் மிகப்பெரிய போட்டியாக பாகிஸ்தானுடன் இந்தியா அகமதாபாத்தில் மோதுகிறது. அதன் பிறகு இந்தியாவுக்கு நான்கு நாட்கள் ஓய்வு கிடைக்கிறது. இதன்படி அக்டோபர் 19ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்தை புனேவில் எதிர்கொள்கிறது.
இதனை அடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்தை அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலாவில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆறு நாட்கள் ஓய்வு கிடைக்கிறது. அதன் பிறகு அக்டோபர் 29ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்தை லக்னோவில் எதிர்கொள்கிறது. இதன் பின்னர் நவம்பர் இரண்டாம் தேதி இந்தியா ஸ்ரீலங்காவுடன் மும்பையில் பலப்பரிட்சை நடத்துகிறது.

அதன் பின்பு நவம்பர் 5ஆம் தேதி இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கொல்கத்தாவில் மோதுகிறது. மீண்டும் இந்தியாவுக்கு ஆறு நாட்கள் ஓய்வு கிடைக்கிறது. அதன்படி இந்திய அணி தங்களது கடைசி ஆட்டத்தை நெதர்லாந்துடன் பெங்களூரில் நவம்பர் 12ஆம் தேதி மோதுகிறது. இந்த புதிய அட்டவணை இந்தியாவுக்கு சாதகமான விஷயத்தை கொடுத்து இருக்கிறது.
அதன்படி ஒருவேளை இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல மற்ற அணிகளின் தயவு தேவைப்பட்டால் கடைசியாக நெதர்லாந்துடன் மோதும் போது தாங்கள் எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்ற தகவல் தெரியும். இதன் மூலம் இந்தியா அதனை கருத்தில் கொண்டு நெதர்லாந்து அணியை எதிர்கொள்ளும். இல்லை அதற்கு முன்பே இந்திய அணி தகுதி பெற்று இருந்தால் அவர்களுக்கு அரை இறுதி போட்டிக்கு முன்பு ஒரு வாரம் ஓய்வு கிடைக்கும். இந்தத் தொடரின் இடையில் இந்திய அணிக்கு ஆறு நாட்கள் விடுமுறை இருமுறை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications