ஹைதராபாத் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளது. பாபர் அஸ்ஸாம் தலைமையிலான பாகிஸ்தான அணி நேற்று தங்களது தாய் நாட்டில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றடைந்தனர்.
அங்கு இரவு தங்கி விட்டு புதன் மதியம் துபாயில் இருந்து புறப்பட்டு நேரடியாக ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்தடைந்தனர். பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வருகையை ஒட்டி ஹைதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அங்கு காவலுக்கு நிற்க வைக்கப்பட்டிருந்த போலீசார் பாகிஸ்தான் வீரர்களுடன் உற்சாகமாக பேசி கைகுலுக்கினர். இதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கடைசியாக 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான அணி இந்தியா வந்தது. அந்த தொடரில் பாபர் அசாம் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் தற்போது முதல் முறையாக பாபர் அசாம் இந்தியாவில் விளையாடுகிறார். புறப்படுவதற்கு முன்பு பேசிய பாபர் அசாம் அரை இறுதி சொல்வதெல்லாம் சிறிய குறிக்கோள் தான் என்றும் உலகக்கோப்பை கைப்பற்றுவதை எங்களது லட்சியம் என்று கூறினார்.
தற்போது ஹைதராபாத்தில் தங்கி உள்ள பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடருக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் வரும் 29ஆம் தேதி ஆஸ்திரேலியாவை 2வது பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.
இதன்பிறகு அக்டோபர் மூன்றாம் தேதி ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
இதனை அடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் வரும் ஆறாம் தேதி நெதர்லாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான், 10ம் தேதி இலங்கையையும் 14ஆம் தேதி இந்தியாவையும், 20 ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும் ,23ஆம் தேதி ஆப்கானிஸ்தானையும், 27ஆம் தேதி தென்னாப்பிரிக்காவையும் 31ஆம் தேதி வங்கதேசத்தையும், நவம்பர் நான்காம் தேதி நியூசிலாந்தையும் நவம்பர் 11ஆம் தேதி இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது.