அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா ஒரு முறை கூட தோற்றதில்லை என்ற சாதனை தொடர்கிறது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்கள் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 86 ரன்களை விளாசினார். இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
117 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றதால் ரன் ரேட் எகிறியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் உடன் 1.822 ரன் ரேட் உடன் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 1.60 ரன் ரேட் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் 2.36 என்ற ரன் ரெட் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி உடன் 4 புள்ளிகளுடன் - 0.13 ரன் ரேட் உடன் நான்காம் இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் 0.55 என்ற ரன் ரேட் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
வங்கதேச அணி மூன்று போட்டிகள் விளையாடி ஒரு வெற்றி இரண்டு தோல்வியுடன் இரண்டு புள்ளிகள் பெற்று -0. 69 என்ற ரன் ரேட் உடம் இருக்கிறது.எனினும் இலங்கை, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு வெற்றியை கூட பெறாமல் முறையே 7 ,8 மற்றும் 9 ,10வது இடத்தில் இருக்கிறது.