Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரையிறுதிக்கு கூட போகாத பாகிஸ்தானுக்கு பரிசுத் தொகை.. பாபர் அசாம் அணிக்கு வாரி வழங்கிய ஐசிசி

மும்பை : ஐசிசி உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கும் பரிசு தொகை வழங்கி நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அரை இறுதிக்கு கூட செல்லாத அணிகளுக்கும் ஐசிசி பரிசு தொகையை தற்போது வாரி வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.

பிதாமகன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா எவ்வாறு ஏலத்தில் கலந்து கொண்டதற்காக உங்கள் மனவலிமையை பாராட்டி சோப்பு டப்பாவை பரிசாக வழங்குகிறோம் என்று கூறுவார். அதேபோல் இந்த உலகக் கோப்பை தொடரில் நீங்கள் வந்ததற்காகவே பரிசு என்று ஐ சி சி வாரி வழங்கி இருக்கிறது.

ICC World cup 2023 Prize money for Pakistan and england

அதன்படி பாகிஸ்தான அணிக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதாவது ஒரு போட்டியில் வென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 35 லட்சம் லட்சம் மற்றும் அரை இறுதிக்கு செல்லாமல் வெளியேறினால் 80 லட்சம் என அனைத்து அணிகளுக்குமே பரிசு தொகையை ஐசிசி அறிவித்திருக்கிறது.

அதன்படி இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு செல்லாமல் வெளியேறியதால் அவர்களுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பு பரிசுத்தொகை அளிக்கப்பட உள்ளது. இதேபோன்று இந்த தொடரில் மூன்று வெற்றிகளை பெற்று அரை இறுதிக்கு செல்லாமல் வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது.

உலகின் மிகவும் ஏழ்மையான கிரிக்கெட் வாரியமாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தானை போல் இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. இதேபோன்று புள்ளி பட்டியலில் கடைசி மூன்று இடத்தை பிடித்துள்ள வங்கதேசம், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு தலா ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை கிடைக்கப்போகிறது.

இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் சத்தமாக சிரிக்க தொடங்கி விட்டார்கள். கலந்துகொண்டு வெற்றி பெற்றதற்கு ஒரு பரிசு கிடைத்தாலும் அரை இறுதி வெளியேறிய அணிக்கு எதற்கு தனியாக 80 லட்சம் பரிசு கொடுக்கிறீர்கள் என்று ஐசிசி யின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Story first published: Monday, November 13, 2023, 22:11 [IST]
Other articles published on Nov 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+