Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பை ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ள முதல் பிரச்சினையா? அடிவாங்க போகும் பிசிசிஐ

ஐதராபாத் : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டம் நாளை முதல் தொடங்குகிறது.இதில் ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பை மெயின் சுற்றுக்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

இதற்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் எப்போதுமே பிப்ரவரி அல்லது மே ஜூன் ஆகிய மாதங்களில் தான் நடைபெறுவது வழக்கம்.

ICC World cup 2023 - Rain threat in hyderabad as warm up matches kicks off

இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் எப்போதும் கோடைகாலத்தில் தான் நடைபெறும். ஆனால் ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவதால் உலகக் கோப்பை போட்டியை பிசிசிஐ தனது செல்வாக்கை பயன்படுத்தி அக்டோபர் மாதத்திற்கு மாற்றியது. அக்டோபர் மாதம் என்பது இந்தியாவில் வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இதில் தென்னிந்தியா முழுவதும் அக்டோபர் நவம்பர் மாதம் மழை பெய்யும்.

இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிகளை மழைக்காலத்தில் பிசிசிஐ வைத்திருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில் மழை பெய்தாலும் போட்டியை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை பிசிசிஐ ஏற்கனவே மேற்கொள்ள அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.

இதில் ஹைதராபாத்தில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் மோதுகிறது. இந்தப் போட்டிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹைதராபாத்தில் வியாழக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது எதிர்பார்த்தபடியே ஐதராபாத்தில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியை பாதியில் முடித்துவிட்டு ஹோட்டலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் மைதானத்தை முழுவதுமாக ஊழியர்கள் மூடினர். உலகக்கோப்பை தொடரின் போது மழை பாதிப்பு ஏற்படும் என அனைவருமே எதிர்பார்த்து நிலையில் தற்போது பயிற்சி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை தன் வேலையை காட்டுகிறது.இதனால் கடுப்பான ரசிகர்கள் பிசிசிஐ கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பயிற்சி ஆட்டத்திற்கு இப்படி என்றால் முக்கியமான ஆட்டத்தில் மழை பெய்ய தொடங்கினால் பிசிசிஐயின் கதி என்ன ஆகுமோ.

Story first published: Thursday, September 28, 2023, 22:45 [IST]
Other articles published on Sep 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+