Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் Iconic மைதானங்களில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகள்.. ஐசிசி அட்டவணையில் ஒரு பார்வை

மும்பை : ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடர் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு பாரம்பரியம் மிக்க மைதானங்களில் சரியாக ஐந்து போட்டிகளைப் பிரித்து ஐசிசி வழங்கி இருக்கிறது.இது அனைத்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் பாரம்பரியமிக்க பழமையான மைதானங்களில் ஒன்று ஈடன் கார்டன் கொல்கத்தா ஆகும்.

இந்த மைதானத்தில் தற்போது உள்ள நிலவரப்படி 60,000 மேற்பட்ட மக்கள் அமர்ந்து பார்க்க முடியும். இங்கு வங்கதேச அணி தகுதி சுற்றி விளையாடும் ஒரு அணியை எதிர்கொள்கிறது. இதேபோன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மோதும் ஆட்டமும் ஈடன் கார்டனில் நடைபெறுகிறது. இதேபோன்று இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டமும், இங்கிலாந்து பாகிஸ்தான் மோதும் ஆட்டமும் ஈடன் கார்டனில் நடைபெறுகிறது.

ICC World cup 2023 schedule - Matches in india iconic grounds full details

இதேபோன்று அரை இறுதி ஆட்டமும் இங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று மும்பை வான்கடே மைதானத்தில் 5 போட்டிகள் நடக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் வான்கடேவில் தான் நடைபெற்றது. ஆனால் இம்முறை இறுதிப்போட்டி நடத்தப்படவில்லை.அதற்கு பதிலாக இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டமும், தென்னாப்பிரிக்கா வங்கதேசத்தை எதிர்கொள்ளும் ஆட்டமும், இந்தியா தகுதி சுற்ற அணிகளுடன் மோதும் ஆட்டமும் ,ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானுடன் மோதும் ஆட்டமும், அரையிறுதி ஆட்டமும் இங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் 5 போட்டிகள் தான் நடத்தப்படுகிறது. இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டமும், இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டமும், இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியும், தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் எதிர்கொள்ளும் ஆட்டமும், இறுதி போட்டியும் இந்த மைதானத்தில் நடத்தப்படுகிறது.

இதேபோன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா தகுதி சுற்றில் இருந்து வரும் ஒரு அணியுடனும், நியூசிலாந்து தகுதி சுற்றில் இருந்து வரும் ஒரு அணியினுடனும் பெங்களூரில் விளையாடுகிறது. இதேபோன்று நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டமும் இங்கிலாந்து தகுதி சுற்று அணியுடன் மோதும் ஒரு ஆட்டமும் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டமும் பெங்களூருவில் நடைபெறுகிறது.

Story first published: Tuesday, June 27, 2023, 13:21 [IST]
Other articles published on Jun 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+