Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை -190 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா.. 167 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 167 ரன்களில் சுருண்டு படுதோல்வியை தழுவியது. புனேவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் பவுமா 24 ரன்களில் ஆட்டம் இழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குயிண்டன் டி காக்,வெண்டர் டுசன் ஜோடி அபாரமாக விளையாடி 200 ரன்களை சேர்த்தது.

ICC World cup 2023 - south africa beat NZ by 190 runs

இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். நடப்பு உலக கோப்பை தொடரில் நான்காவது சதத்தை பூர்த்தி செய்த குயின்டன் டிகாக் 114 ரன்களில் வெளியேறினார். அபாரமாக விளையாடிய வென்டர் டூசன் 118 பந்துகளில் 133 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் ஐந்து இமாலய சிக்சர்களும் அடங்கும். இறுதியில் டேவிட் மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸர்களும் இரண்டு பவுண்டர்களும் அடங்கும்.

இதன் மூலம் 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 357 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்தது. இதன் மூலம் தொடர்ந்து எட்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி 300 ரன்கள் மேல் அடித்திருந்தது. இதனை அடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. இதில் தென்னாப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே ஆக்ரோசமாக பந்து வீசி அசத்தினர்.

தென்னாபிரிக்காவும் நியூசிலாந்தும் வேறு வேறு ஆடுகளத்தில் பேட்டிங் செய்கிறதா என்ற அளவிற்கு ஆடுகளத்தின் தன்மை மாறியது. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரர் கான்வே இரண்டு ரன்களிலும் ,ரச்சின் ரவிந்த்ரா 9 ரன்களிலும், கேப்டன் டாம் லாத்தம் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

தொடக்க வீரர் வில் யங் ரன்களும் டாரல் மிச்சல் 24 ரன்களும் எடுத்தனர். அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் மட்டும் 50 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். அதன் பின் களமிறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். இன்னும் சொல்லப்போனால் நியூசிலாந்தில் பேட்டிங்கில் மூன்று பேர் மட்டும் தான் இரட்டை இலக்கம் ரன்களை தொட்டனர்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் எல்லாம் 167 ரன்களில் சுருண்டது. தென்னாபிரிக்க பந்துவீச்சில் கேசவ் மஹராஜ் நான்கு விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தை பிடித்தது.

Story first published: Wednesday, November 1, 2023, 21:35 [IST]
Other articles published on Nov 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+