பல்லு பிடுங்கிய பாம்பாக மாறிய தென்னாப்பிரிக்கா..உலககோப்பையில் லக்கே இல்ல.. 2 முக்கிய வீரர்கள் விலகல்
டர்பன் : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் மிகவும் அதிர்ஷ்டமே இல்லாத அணி என்றால் அது தென்னாப்பிரிக்கா தான். இதுவரை ஒரு உலகக்கோப்பை இறுதி போட்டி வரை அவர்கள் சென்றதே கிடையாது.
பலமான அணியாக உலக கிரிக்கெட்டில் விளங்கினாலும், அவர்களுக்கு இயற்கையிலே ஒரு பிரச்சனை வந்துவிடும். 92 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டு அவர்களுக்கு வேட்டு வைத்தது.

இதை போல் 99 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஒரு ரன் அவுட் அவர்களின் தலைவிதியே மாற்றியது. இப்படி ஒவ்வொரு உலகக்கோப்பைகளும் ஏதாவது ஒரு பிரச்சனை தென்னாப்பிரிக்காவுக்கு என்று அளவெடுத்து தைப்பது போல் வந்து விடும். இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பலம் வாய்ந்த அணியாக விளங்கியது.
ஆஸ்திரேலியாவை தங்களது சொந்த மண்ணில் பொளந்து எடுத்ததால் தென்னாப்பிரிக்கா மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது இந்த நிலையில் உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில் அந்த அணியின் முக்கிய வீரர்கள் இருவர் காயம் காரணமாக விலகி இருப்பது அந்த அணியின் பலத்தை குறைத்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் அசுர வேகத்தில் வீசக்கூடிய வேக பந்துவீச்சாளர் நோக்கியா காயம் காரணமாக நடப்பு உலக கோப்பை தொடரிலிருந்து விலகி உள்ளார்.ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் தொடரிலிருது விலகி இருந்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே போல் ஒரு சூழல் உருவாக்கி இருக்கிறது .
இதேபோன்று சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளரான மங்களா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து இவர்களுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஆண்டில் பிலுக்வாயோ மற்றும் லிசாட் வில்லியம்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தற்போது தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு படையில் மார்க்கோ யான்சன்,லுங்கி கிடி மற்றும் ரபடா ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications