டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் 121 பந்துகளில் 131 ரன்கள் விளாசி அசத்தினார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்தது.
இதில் இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் மற்றும் சமர விக்ரமா ஆகியோர் சதம் விளாசி அசத்தினார். இதன் அடுத்து 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி பரிதாபமான நிலையில் இருந்த போது அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் அகமதுல்லா ஷபிக் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த நிலையில் முஹம்மது ரிஸ்வான் கால் வலியால் துடித்து மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதை அடுத்து மருத்துவ குழு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மீண்டும் விளையாடினாலும் வலியால் துடித்தது போல் செய்தார்.
இந்த நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளிடம் பேசிய முகமது ரிஸ்வான் ஒவ்வொரு முறையும் நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற வைக்கும் போது நிச்சயம் பெருமைமிக்க தருணமாக இருக்கும். இந்த தருணத்தில் எனக்கு வார்த்தையே வரவில்லை. நிச்சயமாக இது கடினமான போட்டியாக தான் இருந்தது. நாங்கள் முதலில் பந்துவீசி முடித்த பிறகு இந்த இலக்கை துரத்த முடியும் என்ற நம்பிக்கையில் தான் களத்திற்கு வந்தோம்.
ஆனால் துரதிர்ஷ்டசமாக பாபர் அசாம் முன்கூட்டியே ஆட்டமிழந்து விட்டார்.இதை அடுத்து நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற்று விட்டோம். நிச்சயம் ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. நான் இளம் வீரர் அப்துல்லா ஷபிக்கிடம் ஆட்டத்தை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து விளையாடலாம் என்று கூறினேன்.வலியால் அவதிப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த ரிஸ்வான் சில சமயம் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
சில சமயம் நான் வலியால் துடித்தது போல் நடித்தேன் என்று கூறி சிரித்தார். இதன் மூலம் முஹமது ரிஸ்வான் தமக்கு காயம் ஏற்பட்டுவது போல் நடித்தால் தம்மால் ஓட முடியாது என நினைத்து இலங்கை அணி பில்டிங்கை மாற்றி அமைக்கும். அதனை பயன்படுத்திக் கொண்டு பவுண்டரி சிக்ஸர் அடிக்க முகமது ரிஸ்வான் பிளான் போட்டு இருக்கிறார். முகமது ரிஸ்வானின் இந்த நடிப்பை நம்பி இலங்கையும் அவர் விரித்த வலையில் சிக்கியது. இதனால் பலரும் முஹமமது ரிஸ்வான் இந்த நடிப்பை பாராட்டி வருகின்றனர்.