ஸ்காட்லாந்தை வீழ்த்தி காலிறுதி ஆசையை தக்க வைக்குமா வங்கதேசம்?
வெலிங்டன்: உலக கோப்பையில் நாளை வங்கதேசமும், ஸ்காட்லாந்தும் மோத உள்ளன.
நியூசிலாந்தின் சாக்சன் பீல்ட் மைதானத்தில் வைத்து நடைபெறும் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசமும், ஸ்காட்லாந்தும் மோத உள்ளன.

3 போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேசம் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அதிலிருந்து ஒரு புள்ளியை பெற்றது.
ஆனால் ஸ்காட்லாந்து மூன்று போட்டிகளிலும் தோற்றது. ஆப்கனுக்கு எதிராக கடந்த போட்டியில் அந்த அணி தோற்றது அதற்கு பெரும் பின்னடைவாக இருக்கும். இப்போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு தகுதி பெறும் ஆசையை தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது.
Story first published: Wednesday, March 4, 2015, 17:53 [IST]
Other articles published on Mar 4, 2015


Click it and Unblock the Notifications