For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO: உலக கோப்பைக்கான பாடலை வெளியிட்ட ஐசிசி.. வாவ்… சூப்பர்…! நீங்க கேட்டுட்டீங்களா?

துபாய்: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஐசிசி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பாடல் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இங்கிலாந்தில் வரும் மே 30ம் தேதி முதல் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. போட்டிகளைப் பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து 10 லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

Icc world cup cricket song released officially

இத்தொடரில் இந்திய அணி ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை எதிர்த்து தன் முதல் லீக் போட்டியில் விளையாட உள்ளது. நாட்கள் வெகு குறைவாகவே இருப்பதால் ரசிகர்கள் உச்சக் கட்ட பரபரப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அத்தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டு உள்ளது. ஸ்டான்ட் பை என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகர் லாரின் பாடி அசத்தி இருக்கிறார்.

உலக கோப்பை தொடர் நடைபெறும் காலம், கோடைக்காலம் என்பதால் காட்சியமைப்பும் அதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. உலக கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட்டாப், பாடகர் லாரின் ஆகியோர் இணைந்து இந்த பாடலை உருவாக்கியுள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள பன்முக கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் இந்த பாடல் உள்ளது. பாடல் வெளியான சிலமணி நேரங்களில் வைரலாகி இணையதளங்களில் ஹிட்டாகி பட்டையை கிளப்பி வருகிறது.

Story first published: Saturday, May 18, 2019, 11:28 [IST]
Other articles published on May 18, 2019
English summary
Icc world cup cricket song released officially
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X