Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி பெற வேண்டிய இக்கட்டில் இங்கிலாந்து.. அடுத்த சுற்று ஆசையில் நியூசிலாந்து - நாளை மோதல்!!

வெலிங்டன்: வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்தும், வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற எதிர்பார்ப்பிலுள்ள நியூசிலாந்தும் நாளை மோதப்போகும் போட்டியில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உலக கோப்பையின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை நியூசிலாந்தின் வெலிங்டன் நகர மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டியில் மோத உள்ளன.

நேரம்

நேரம்

இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு தொடங்க உள்ளது.

2 வெற்றிகள்

2 வெற்றிகள்

நியூசிலாந்து தனது முதல் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் இலங்கையை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இரண்டாவது போட்டியில் ஸ்காட்லாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி

ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி

இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 111 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

காலிறுதிக்கு ஆசை

காலிறுதிக்கு ஆசை

நியூசிலாந்து தொடர்ச்சியாக இரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் காலிறுதி எட்டும் தூரத்தில்தான் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நாளைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் காலிறுதிக்குள் செல்வது கன்பார்ம் செய்யப்பட்டுவிடும்.

தப்புமா இங்கிலாந்து

தப்புமா இங்கிலாந்து

இங்கிலாந்தை பொறுத்தளவில், கிட்டத்தட்ட இது வாழ்வா, சாவா போட்டிபோல ஆகியுள்ளது. உலக கோப்பையை இணைந்து நடத்தும், ஆஸ்திரேலியாவிடம் அடைந்த படுதோல்வி பாதிப்பில் இருந்து இன்னும் அந்த அணி மீளாத நிலையில், உலக கோப்பையை நடத்தும் மற்றொரு நாடான நியூசிலாந்திடம் மோத உள்ளது அந்த அணிக்கு நடுக்கத்தை தந்துள்ளது. உள்ளூர் நிலவரம் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கலாம். இந்த போட்டியிலும் இங்கிலாந்து தோற்றால், பிறகு பதற்றத்துடனே அனைத்து போட்டிகளிலும் விளையாடி காலிறுத்திக்கு தகுதி பெற போராட வேண்டி வரும்.

நியூசிலாந்தின் திடீர் சரிவு

நியூசிலாந்தின் திடீர் சரிவு

நியூசிலாந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்ரிருந்தாலும்கூட, குட்டி அணி ஸ்காட்லாந்துக்கு எதிராக, சிறு ஸ்கோரை துரட்டிய நியூசிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்ததை அந்த அணி கேப்டன் மெக்கல்லத்தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பேட்டிங் வரிசை பலமாக மாற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கேப்டன் சொதப்பல்

கேப்டன் சொதப்பல்

இங்கிலாந்தில் ஜொலிக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும்கூட ஆஸ்திரேலியாவிடம் அவர்கள் பந்து வீச்சு எடுபடவில்லை. பேட்டிங்கில் கேப்டன் மோர்கன் தொடர்ந்து சொதப்புகிறார். கடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளஇல் மோர்கன் அடித்த மொத்த ரன்களே 2தான் என்பதில் இருந்து கேப்டனின் தடுமாற்றத்தை தெரிந்து கொள்ளலாம். கோன் எவ்வழியோ குடியும் அவ்வழிதான் என்பதைப்போல, கேப்டனை போலவே மற்ற வீரர்களும் பேட்டிங்கை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.

நியூசிலாந்து அணி விவரம்

நியூசிலாந்து அணி விவரம்

பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்) டிரென்ட் போல்ட், கிராண்ட் எலியட், டோம் லதம், மார்டின் குப்டில், மிட்சேல் மெக்லின்கன், நேத்தன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னே, டேனியல் வெட்டோரி, கனே வில்லியம்சன், கோரி ஆண்டர்சன், டிம் சவுத்தி, லுக் ரோன்ச்சி (விக்கெட் கீப்பர்), ரோஸ் டெய்லர்.

இங்கிலாந்து அணி விவரம்

இங்கிலாந்து அணி விவரம்

இயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆன்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ரவி போபாரா, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஃபின், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஜோ ரூட், ஜேம்ஸ் டைலர், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.

Story first published: Thursday, February 19, 2015, 16:56 [IST]
Other articles published on Feb 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+