For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலககோப்பையில் 16 ஆண்டுகளாக தொடரும் சதம் ராசி.. இம்முறை நியூசிலாந்து பேர்ல எழுதுங்க?

அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 16 ஆண்டுகளாக ஒரு ராசி தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த ராசி வேலை செய்தால் நியூசிலாந்து அணி உலக கோப்பையை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் முதல் ரன் முதல் விக்கெட் யார் அடித்தார்கள் என்பது வரலாறு என்று முன்கூட்டியே பார்த்தோம்.அதேபோல் ஒவ்வொரு உலகக்கோப்பைகளும் யார் முதல் சதத்தை அடிக்கிறார்கள் என்பதும் ஒரு வரலாறாக திகழ்கிறது.

ICC World Cup first century Team that won the world cup since 2007

அந்த வகையில் இந்த தொடரில் முதல் ஆட்டத்திலேயே நியூசிலாந்து அணியின் கான்வே சதம் அடித்திருக்கிறார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இதில் நியூசிலாந்தின் வில் யங் டக் அவுட்டாக, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கான்வேவும் ரச்சின் ரவீந்திரநாவும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. இந்த நிலையில் இந்த தொடரின் முதல் சதத்தை கான்வே பூர்த்தி செய்தார். இதனை அடுத்து ரச்சின் ரவீந்திராகவும் சதம் விளாச நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களே வெற்றி இலக்கை எட்டியது. அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு முதல் எந்த வீரர் முதல் சதத்தை அடிக்கிறாரோ அவருடைய அணி உலக கோப்பையை வென்று விடுகிறது.

2007 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் முதல் சதத்தை பதிவு செய்ய அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோன்று 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விரேந்திர சேவாக் முதல் சதத்தை பதிவு செய்ய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் முதல் சதம் அடிக்க சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா தட்டி சென்றது. இதேபோன்று 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜோ ரூட் முதல் சதம் அடிக்க அந்த ஆண்டு இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த வரிசையில் தற்போது நியூசிலாந்து முதல் சதம் அடித்திருப்பதால் அந்த அணி உலக கோப்பையை முதல்முறையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Thursday, October 5, 2023, 23:34 [IST]
Other articles published on Oct 5, 2023
English summary
ICC World Cup first century Team that won the world cup since 2007 உலககோப்பையில் 16 ஆண்டுகளாக தொடரும் சதம் ராசி.. இம்முறை நியூசிலாந்து பேர்ல எழுதுங்க?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+