Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முட்டாள் தனமா பேசாதீங்க.. ஆடுகளத்தை எப்படி மாற்ற முடியும்.. அறிவு இருக்கா? வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 397 ரன்கள் குவிக்க இரண்டாவதாக களம் இறங்கிய நியூஸிலாந்து அணி 327 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக ஆடுகளத்தை கடைசி நேரத்தில் மாற்றி விட்டதாக சிலர் குற்றம் சாட்டினர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தியா மீது பழி சுமத்திய நபர்களை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.

Icc world cup ind vs NZ semi final - Gavaskar rubbishes pitch controversy as nonsense

இது குறித்து பேசிய அவர், இன்று இந்தியாவுக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் சிலர் வருத்தமாக இருப்பார்கள். இந்த போட்டிக்கு முன் இந்தியா எதோ ஆடுகளத்தை மாற்றிவிட்டதாக கூறுகிறார்கள். அது எப்படி மாற்ற முடியும்? கொஞ்சமாவது அறிவு இருக்கா? ஏன் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்?

அப்படி ஆடுகளத்தை மாற்றி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆடுகளத்தில் தானே இந்தியா விளையாடி வெற்றி பெற்றது. இதே ஆடுகளத்தில் தானே நீங்களும் விளையாடினீர்கள். உங்களால் ஏன் வெற்றி பெற முடியவில்லை. இந்தியா விளையாடிவிட்டு அதன் பிறகு ஆடுகளத்தை மாற்ற வைத்து பின் நியூசிலாந்தை விளையாட வைத்தார்களா? இருவருக்குமே ஒரே ஆடுகளத்தில் தானே கொடுத்தார்கள்.

அப்புறம் எப்படி நீங்கள் முட்டாள்தனமாக பேசலாம். உங்களால் இந்தியா வெற்றி பெறுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் இறுதி போட்டியில் தொடங்கவில்லை. அதற்குள் அகமதாபாத்தில் இந்தியா ஆடுகளத்தை மாற்றிவிட்டது என்று பேசுவார்கள். ஆடுகளம் எப்படி இருந்தாலும் உங்களால் வெற்றி பெற முடிய வேண்டும். அதுதான் கிரிக்கெட் வீரர்களுக்கு அழகு அதை விட்டுவிட்டு ஆடுகளம் மீது குறை சொல்லி விட்டு காரணம் தேடக்கூடாது என்று கவாஸ்கர் கடுமையான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

Story first published: Thursday, November 16, 2023, 0:02 [IST]
Other articles published on Nov 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+