For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொந்த ஊரு பாசமா அகார்கர்? உலககோப்பை இந்திய அணியில் 5 மும்பை வீரர்களுக்கு இடம்.. வெடித்த சர்ச்சை

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த அணியில் பல குறைகள் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உலகக் கோப்பை போட்டி தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது. சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி வெறும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்திருக்கிறது.

ICC World cup india squad - 5 Mumbai players got place created controversy

ஹர்திக் பாண்டியாவை சேர்த்து ஆறு வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.இந்தியாவில் நடக்கும் போட்டிக்கு 6 வேகப்பந்துவீச்சாளர்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இங்கிலாந்தில் நடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நான்கு சுழற் பந்து வீச்சாளர்களை உலக கோப்பையில் எடுத்ததாகவும், ஆனால் தற்போது வெளிநாட்டில் நடப்பது போல் ஆறு வேக பந்துவீச்சாளர்களை எடுத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.

மேலும் தேர்வுக்குழு தலைவர் ஆன அகார்கர் மும்பையை சேர்ந்தவர் என்பதால், தாராளமாக 5 மும்பை வீரர்களுக்கு உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கொடுத்திருப்பதாகவும் தமிழகத்திலிருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஐபிஎல் படி பார்த்தால் சாம்பியன் பட்டம் என்ற சிஎஸ்கே அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜாவுக்கு மட்டும்தான் உலக கோப்பை அணியில் இடம் கிடைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதிலும் மும்பை இந்தியன்ஸ் சேர்ந்த 4 வீரர்களுக்கு இடம் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு வலது கை ஸ்பின்னர்கள் மிகவும் அவசியம். ஆனால் அணியில் ஒரு ஸ்பின்னர் கூட இல்லாதது ரசிகர்களிடையே மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

மேலும் காயத்திலிருந்து திரும்பிய கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களுடைய பார்மை நிரூபிக்காத நிலையில் அவர்களுக்கு உலகக் கோப்பை அணியில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் வாய்ப்பு கொடுக்காமலேயே நீக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Story first published: Thursday, September 7, 2023, 15:54 [IST]
Other articles published on Sep 7, 2023
English summary
ICC World cup india squad - 5 Mumbai players got place created controversy சொந்த ஊரு பாசமா அகார்கர்? உலககோப்பை இந்திய அணியில் 5 மும்பை வீரர்களுக்கு இடம்.. வெடித்த சர்ச்சை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+