பெர்த்: மண்டையை பிளக்கும் வெயிலில் கோஹ்லி, ஷமியுடன் வெளியே சென்ற டோணி
பெர்த்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தனது சகாக்கள் அனைவருடனும் நேரத்தை செலவழிக்க சிறப்பு வழி வைத்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி கண்டது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது டோணி தலைமையிலான இந்திய அணி.
உலகக் கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை இந்தியா தோற்கடித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

அமீரகம்
இந்தியா, ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதும் ஆட்டம் வரும் 28ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இதையொட்டி இந்திய அணி திங்கட்கிழமை பெர்த் வந்தது.

டோணி
இந்திய அணி வீரர்கள் மதிய உணவை சாப்பிட தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியே செல்ல நேற்று அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து முதல் ஆளாக வெளியே கிளம்பியது கேப்டன் டோணி தான்.

கோஹ்லி
கொளுத்தும் வெயிலில் டோணி தனியாக கிளம்பவில்லை. துணை கேப்டன் விராட் கோஹ்லி, பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று மதியம் 1.30 மணிக்கு வெளியே சென்றார் டோணி.

ஒவ்வொறு முறையும்
ஒவ்வொறு முறையும் வெளியே சாப்பிட செல்கையில் டோணி தனது அணியைச் சேர்ந்த வீரர்கள் யாரையாவது அழைத்து செல்கிறார். ஒவ்வொறு முறையும் வேறு வேறு ஆட்களை அழைத்துச் செல்கிறார். இதன் மூலம் அணி வீரர்கள் அனைவருடனும் நல்ல நட்பில் இருக்க முடியும் என்று நினைக்கிறார் டோணி.

ரெய்னா
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக டோணி சுரேஷ் ரெய்னா, அக்சார் பட்டேல் ஆகியோருடன் வெளியே சென்றார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு ரெய்னா மற்றும் சர் ஜடேஜாவுடன் டோணி வெளியே சென்று சாப்பிட்டு வந்தார்.


Click it and Unblock the Notifications