Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை புள்ளி பட்டியல்.. பாகிஸ்தானுக்கு அடிச்ச லக்.. ஆப்கான் அரையிறுதி வாய்ப்பு என்ன ஆச்சு?

மும்பை : ஐசிசி உலக கோப்பை 39 லீக ஆட்டம் முடிவில் மூன்று அணிகள் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து இருக்கிறது. இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்றது.

இந்த நிலையில் மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

ICC World cup points table 2023 - Pakistan semi final chance became brighter after afg loss

இந்த நிலையில் 16 புள்ளிகள் உடன் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. 12 புள்ளிகள் உடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலிய அணியும் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்த அணி எட்டு போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இதே போல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் தலா எட்டு புள்ளிகள் உடன் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கிறது. தற்போது மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நான்காம் இடத்தைப் பிடிக்க போகும் அணி எது என்பதுதான் தற்போது கேள்வியாக இருக்கிறது.

இதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் கடைசி இடத்திற்கு மோத உள்ளன. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் மழையால் ரத்தாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தை இங்கிலாந்தை வீழ்த்தினால் அவர்கள் அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.

இதேபோன்று ஆப்கானிஸ்தான் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர் கொள்கிறது. இதில் தென்னாபிரிக்காவை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருந்தால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். தற்போது இருக்கும் புள்ளி பட்டியலை பார்த்தால் அரை இறுதி சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தான் தெரிகிறது.

Story first published: Tuesday, November 7, 2023, 23:21 [IST]
Other articles published on Nov 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+