Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2023 உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்? கங்குலி, ஹர்பஜன், ஹைடன் சொன்ன கருத்து

2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று தொடரில் 10 அணிகள் பங்கேற்கிறது.

இந்தியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பையை வெல்ல எந்த அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து முன்னாள் வீரர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ICC World cup Prediction - Ganguly and Harbhajan Prediction for title winner

இதற்கு பதில் அளித்த ஹர்பஜன் சிங், என்னை பொறுத்தவரை உலகக்கோப்பை என்பது அழுத்தங்கள் நிறைந்த தொடர். இதில் வெற்றி வாய்ப்பு உள்ள மூன்று அணிகளை நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் அது இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவாக இருக்கும். இந்த மூன்று அணிகளும் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதுவும் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில், நான் மூன்று அணிகளை விட நான்கு அணிகளை தேர்வு செய்கிறேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளுக்குமே உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கங்குலி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய மேத்யூ ஹைடன் உலகக்கோப்பையில் வெல்ல பாகிஸ்தான்,இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்தையும் நம் தள்ளிவிட முடியாது. ஏனென்றால் அந்த அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் சாம்பியன்ஷிப் தொடரில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்று கூறினார் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில் இந்தியாவுக்கு உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு இல்லை. எனக்கு தெரிந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கோப்பையை இம்முறை கைப்பற்றும் என்று கூறினார்.

Story first published: Wednesday, June 28, 2023, 18:13 [IST]
Other articles published on Jun 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+