Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிர்ச்சி.. ஜிம்பாப்வே அபாரம்.. உலககோப்பைக்கு தகுதி பெறுமா முன்னாள் சாம்பியன்

ஹராரே : உலகக் கோப்பை தகுதிச் சுற்றில், முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வே உடன் அதிர்ச்சி தோல்வியை தழுவி இருக்கிறது. ஹராரேவில் நடைபெற்ற லீக் சுற்றில் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணி மோதின.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே வீரர்கள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஜாய்லார்ட் 50 பந்துகளில் 26 ரன்கள் சேர்க்க, கேப்டன் கிரைக் எர்வின் 47 பந்துகளில் சேர்த்து வெளியேறினார். இதே போன்று வீஸ்லி 2 ரன்களில் ஆட்டமிழக்க, அனுபவ வீரர் சென் வில்லியம்ஸ் 23 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். 112 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே தடுமாறியது.

ICC World cup Qualifier - Zimbabwe stunned 2 time champions west indies

அப்போது களத்தில் ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ராசா, ரியன் புருல் ஜோடி அபாரமாக விளையாடி அணியை மீட்டது. சிக்கந்தர் ராசா 68 ரன்கள் சேர்க்க, ரியன் புருல் அரைசதம் எடுத்தார். எனினும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர் முடிவில் 268 ரன்களில் சுருண்டது.

269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இடீஸ் அணி களமிறங்கியது. பிரான்டன் கிங் 20 ரன்களிலும், மெயர்ஸ் 56 ரன்களும் எடுக்க சார்லஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதம் விளாசிய சாய் ஹோப் 30 ரன்களும், நிக்கோலஸ் பூரான் 34 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் தடுமாறியது.

ராஸ்டன் சேஸ் 44 ரன்கள் எடுத்து தனியாக போராட, ல்டர் 19 ரன்கள் மட்டும் சேர்த்தார். மற்ற வீரர்கள் கடுமையாக தடுமாறியதால், வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 233 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 6 சுற்றுக்கு சென்றுள்ளது. அதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணியே, உலககோப்பைக்கு தகுதி பெறும்.

Story first published: Sunday, June 25, 2023, 0:04 [IST]
Other articles published on Jun 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+