Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC உலககோப்பை- புதிய அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.. இலங்கை, நெதர்லாந்துடன் இந்தியா எங்கு மோதுகிறது?

மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்த தொடர் நடைபெறுவதால் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு ரோகித் சர்மா தலைமையிலான அணிக்கு இருக்கிறது என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில் பத்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 அணிகள் நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றது. இதனால் ஐசிசி அண்மையில் வெளியிட்ட அட்டவணையில் எட்டு அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டும் தான் இடம் பெற்றிருந்தது.

 ICC World cup schedule update - Srilanka and Netherland facing india venue details

இந்த நிலையில் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியின் முடிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இலங்கையும் நெதர்லாந்தும் இந்தியாவை எந்த மைதானத்தில் எப்போது எதிர்கொள்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ம் தேதியும்,ஆப்கானிஸ்தானை அக்டோபர் 11ஆம் தேதியும், பாகிஸ்தானை எதிர்கொள்கிறது ம்

அக்டோபர் 15ஆம் தேதியும், வங்கதேசத்தை அக்டோபர் 19ஆம் தேதியும் நியூசிலாந்தை அக்டோபர் 22ஆம் தேதியும், இங்கிலாந்தை அக்டோபர் 29ஆம் தேதியும் எதிர்கொள்கிறது .ஆறு லீக ஆட்டம் முடிந்த பிறகு தான் இலங்கையை இந்திய அணி நவம்பர் இரண்டாம் தேதி மும்பை வான்கடை மைதானத்தில் விளையாடுகிறது. கடைசியாக இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடிய போது இந்திய அணி கோப்பையை வென்றது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.

ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று ஐந்தாம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்திய அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் நவம்பர் 11ஆம் தேதி நெதர்லாந்து அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது. பெங்களூர் மைதானமும் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும். மேலும் நெதர்லாந்தும் சிறப்பாக தற்போது விளையாடி வருவதால் இந்தியாவுக்கு சிரமம் இருக்கலாம்.

Story first published: Thursday, July 6, 2023, 21:25 [IST]
Other articles published on Jul 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+