உலகக் கோப்பை கிரிக்கெட் பட்டியல் வெளியீடு... பாகிஸ்தான் இந்தியா எப்போது மோதுகிறது தெரியுமா?
Recommended Video

கொல்கத்தா: 2019ல் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா ஜூன் 5ல் தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. ஜூன் 16ல் பாகிஸ்தானை சந்திக்கிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது.

மொத்தம் 10 அணிகள், 45 நாட்களில், 48 ஆட்டங்களில் விளையாட உள்ளன. அடுத்த ஆண்டு மே 30 முதல் ஜூலை 14 வரை இந்தப் போட்டிகள் நடக்க உள்ளன.
இதற்கான முழு அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா ஜூன் 5ல் தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. ஜூன் 16ல் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
கடந்த உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பை போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடக்கும். அதன்படி, ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடனும் விளையாடும்.
இந்தியா விளையாடும் ஆட்டங்கள்:
- ஜூன் 5 - தென்னாப்பிரிக்கா
- ஜூன் 9 - ஆஸ்திரேலியா
- ஜூன் 13 - நியூசிலாந்து
- ஜூன் 16 - பாகிஸ்தான்
- ஜூன் 22 - ஆப்கானிஸ்தான்
- ஜூன் 28 - வெஸ்ட் இண்டீஸ்
- ஜூன் 30 - இங்கிலாந்து
- ஜூலை 2 - வங்கதேசம்
- ஜூலை 6 - இலங்கை


Click it and Unblock the Notifications