மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியே சந்திக்காத இந்திய அணியும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் பல பரிட்சை நடத்துகின்றன.
இந்த போட்டி ரன் குவிப்புக்கு சாதகமான மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்கலாம். பொதுவாக இந்த தொடர் முழுவதும் பெரும்பாலும் இந்திய அணி பிளேயிங் லெவனை மாற்றவில்லை. இதனால் நெதர்லாந்து அணிக்கு எதிராக எந்த பிளேயிங் லெவன் களம் இறங்கியதோ, அதே வீரர்கள் தான் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு இருக்கிறது.
தொடக்க வீரராக ரோகித் சர்மா, கில் ஜோடியும் நடு வரிசையில் விராட் கோலி -ஸ்ரேயாஸ் ஐயர் -கே எல் ராகுலும், கீழ் வரிசையில் ஜடேஜாவும் மற்றும் சூரியகுமார் யாதவும் இடம்பெற உள்ளனர். சுழற் பந்துவீச்சாளராக குல்திப் யாதவ் இடம்பெறுவார்.கடைசி மூன்று வீரராக வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ்,முஹமது ஸமி, பும்ரா ஆகிய மூன்று வீரர்களும் இடம்பெற உள்ளனர்.
இந்த 11 வீரர்களை தவிர வேறு எந்த வீரனும் விளையாட 99.99 சதவீதம் வாய்ப்பு இல்லை. நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் முதல் பத்து ஓவரில் இந்திய வீரர்கள் விக்கெட் விழாமல் விளையாட வேண்டும். ரோகித் சர்மா மற்றும் கில் அதிரடியாக விளையாடி 10 ஓவர்களுக்கு 90 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். இதில் யாரேனும் ஒருவர் சதம் அடித்தால் அணிக்கு நல்லது.
அதன் பிறகு களமிறங்கக்கூடிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ராகுல் ஆகியோர் நிலைத்து நின்று கடைசி வரை விளையாட வேண்டும். அதன்பிறகு கடைசி ஐந்து சூரியகுமார் மற்றும் ஜடேஜா ஆகியோர் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் அரை இறுதியில் குவித்தால் வெற்றி வாய்ப்பு நிச்சயம் இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.