ICC World cup - நடுவரானாரா ஸ்ரேயாஸ் ஐயர்? அப்படியே உரிச்சி வச்ச மாதிரி இருக்காரே.. பேன்ஸ் ஆச்சரியம்
ஐதராபாத் : ஐசிசி உலக கோப்பையில் நேற்றுதான் இந்திய அணியின் பஸ் டிரைவர் விஜய் டிவி புகழ் போல் இருப்பதாக அஸ்வின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை நாம் பார்த்திருந்தோம்.
ஆனால் தற்போது இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் போலவே நடுவர் ஒருவர் இருப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது.நமக்கெல்லாம் பரீட்சயம் பெற்ற பிரபல நடிகர் ஜானி சின்ஸ் ஆசிரியராக,டோர் டெலிவரி செய்பவராக, மருத்துவராக ஒரே தோற்றத்தில் பல கதாபாத்திரங்கள் ஏற்று காட்சியளிப்பார்.

அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயரும், அந்த நடிகரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் பாட்ஷா படத்தில் நீ நடந்தால் நடை அழகு பாடலில் எப்படி நக்மா கண்ணுக்கு அனைவரும் ரஜினி போல் தெரிவாரோ அதேபோல் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் நடுவர் ஸ்ரேயாஸ் ஐயரை உரித்து வைத்தது போல் நடுவர் ஒருவர் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறார்.
பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதிய பயிற்சி ஆட்டத்தில் அக்சய் தாத்திரே என்பவர் நடுவராக செயல்பட்டிருந்தார். அப்போது ஆட்டத்தின் முதல் பந்தே ஒய்டாக மாற அவர் ஓயிடு காட்டினார். அப்போதுதான் அக்சய் தாத்திரேவை ரசிகர்கள் முதல் முறையாக கண்டனர். பார்ப்பதற்கு அப்படியே ஸ்ரேயாஸ் ஐயர் போலவே இருக்கிறார் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
மேலும் பலரும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் உலகக் கோப்பை அணியில் இருக்கிறாரே அவர் எப்படி நடுவராக மாறினார் என்று கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும் சில ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் வீரராகவும் இருந்து நடுவராகவும் செயல்படுகிறார். ஒரே நபர் இரண்டு வேலையை செய்யப் போகிறார் என்று பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
இதனால் ஒரே இரவில் அந்த நடுவர் பிரபலமானார்.அக்சய தாத்திரே இந்தியாவின் போட்டிக்கு நடுவராக செயல்பட்டால் அப்போதுதான் இருக்கிறது கச்சேரி. நேற்று பாபர் அசாம் தனது முதல் போட்டியில் இந்தியாவின் விளையாடினார். ஆனால் அனைவரின் கவனத்தையும் இந்த அக்சய் தாத்திரே என்ற நடுவர்தான் ஈர்த்தார்.


Click it and Unblock the Notifications