Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பையில் கெத்து காட்டும் நியூசிலாந்து.. 48 மணி நேரத்தில் 2வது சம்பவம்.. தென்னாப்பிரிக்கா தோல்வி

திருவனந்தபுரம் : உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை நியூசிலாந்து டி எல் எஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை பங்கம் செய்த நியூசிலாந்து அணி, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

ICC World cup Warm up match - NZ Beat south africa by 5 runs in DL Method

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்த அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய வில்லியம்சன் 12 ரன்களில் ஆட்டம் இழக்க இரண்டாவது விக்கெட்டுக்கு சிஎஸ்கே வீரர் கான்வேயுடன் கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். இதில் பொறுமையாக விளையாட வில்லியம்சன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். சிறப்பாக விளையாடிய டிவோன் கான்வே 73 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார்.

இதன் பிறகு டாம் லாத்தம் நிதானமாக விளையாடி அரை சதம் கடக்க, அதிரடி வீரர் கிளன் பிலிப்ஸ் 43 ரன்கள் சேர்த்தார். இறுதியில் மார்க் சாப்மேன் 20 ரன்களும், டாரல் மிச்செல் 25 ரன்களும் மிச்சல் சாண்ட்னர் 16 ரன்களும் சேர்க்க நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் லுங்கி கிடி, மார்க்கோ ஜான்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை அடுத்து மழை குறிக்கிட்டதால் ஆட்டம் 37 ஓவராக குறைக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா வெற்றி இலக்கு 219 என்று மாற்றப்பட்டது.

தொடக்க வீரராக களம் இறங்கிய ஹென்றிக்ஸ் டக்அவுட் ஆக குயிண்டன் டி காக் மற்றும் வெண்டர் டுசன் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. வாண்டர் டுசன் 52 ரன்களில் வெளியேற கேப்டன் மார்க்கிரம் 13 ரன்கள் சேர்த்தார். ஹென்றிச் கிளாசின் 39 ரன்கள் சேர்க்க டேவிட் மில்லர் 18 ரன்கள் எடுத்திருந்தார்.

அபாரமாக விளையாடிய குயிண்டன் டிகாக் ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் சேர்த்தார். இன்னும் தென்ஆப்பிரிக்கா அணி 37 ஓவர் முடிவில் 211 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் பவுல்ட் 5 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்த அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை இங்கிலாந்துடன் வரும் ஐந்தாம் தேதி எதிர்கொள்கிறது.

Story first published: Monday, October 2, 2023, 23:10 [IST]
Other articles published on Oct 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+