2023 உலகக்கோப்பை வார்ம்-அப் போட்டிகள் முழு லிஸ்ட்.. எந்த சேனலில் பார்க்கலாம்? ஹாட்ஸ்டாரில் இலவசமா?
மும்பை : 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அக்டோபர் 5 முதல் போட்டிகள் துவங்க உள்ளன.
அதற்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகள் நடைபெற உள்ளன. செப்டம்பர் 29 முதல் துவங்கும் பயிற்சிப் போட்டிகள் அக்டோபர் 2 வரை நடக்கின்றன.

உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் தங்கள் குரூப்பில் இடம் பெறாத மற்ற இரண்டு அணிகளுடன் மோதும்.
ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று பயிற்சிப் போட்டிகள் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. அதனால், அனைத்து பயிற்சிப் போட்டிகளையும் தனியாக காண்பது முடியாத காரியம்.
இந்திய அணி இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சிப் போட்டியில் மோத உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை 2023 பயிற்சிப் போட்டிகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள் -
இந்தியாவில் 2023 உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் காணலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை காணலாம்.
டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்தியா ஆடும் போட்டிகளை இலவசமாக காணலாம்.
மொபைலில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் எப்படி பார்ப்பது? இலவசமா?
மொபைல் அல்லது லேப்டாப்பில் 2023 உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் app அல்லது இணையதளத்தில் காணலாம்.
இது முற்றிலும் இலவசம். சந்தா செலுத்தாதவர்களும் ஹாட்ஸ்டாரில் போட்டிகளை இலவசமாக காணலாம்.
2023 உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகள் துவங்கும் நேரம் - மதியம் 2 மணி.
டாஸ் போடும் நேரம் - மதியம் 1.30
ஐசிசி உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகள் 2023 - முழு அட்டவணை :
செப்டம்பர் 29, 2023 - வெள்ளி
வங்கதேசம் - இலங்கை,
பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான்,
கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
நியூசிலாந்து - பாகிஸ்தான்,
ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியம், ஹைதராபாத்
செப்டம்பர் 30, 2023 - சனிக்கிழமை
இந்தியா - இங்கிலாந்து,
பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
ஆஸ்திரேலியா - நெதர்லாந்து,
கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியம், திருவனந்தபுரம்
அக்டோபர் 2, 2023 - திங்கள்
இங்கிலாந்து - பங்களாதேஷ்,
பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா,
கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
அக்டோபர் 3, 2023 - செவ்வாய்
ஆப்கானிஸ்தான் - இலங்கை,
பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
இந்தியா - நெதர்லாந்து,
கிரீன்ஃபீல்ட் சர்வதேச ஸ்டேடியம், திருவனந்தபுரம்
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா,
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்


Click it and Unblock the Notifications