20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்தது பிசிசிஐ- கொல்கத்தாவில் பைனல்!
மும்பை: இந்தியாவில் அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த 20 ஓவர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 11-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக இன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரு, சென்னை, தர்மசாலா, மொஹாலி, மும்பை, நாக்பூர், டெல்லியில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 3-ந் தேதியன்று இறுதிப் போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான நிர்வாக குழு ஒன்றையும் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அக்குழுவில், அனுராக் தாகூர், அமிதாப் சவுத்ரி, அனிருத் சவுத்ரி, கங்கா ராஜூ, ராஜீவ் சுக்லா, ஆஷிஸ் சேலர், ஆஷிபாத் பெஹ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications