Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் 'யுத்தம்'- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!

மிர்பூர்: 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரதான சுற்று போட்டி இன்று தொடங்கியது. சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் வங்கதேசத்தின் மிர்புர் தேசிய ஸ்டேடியத்தில் மோதின.

பரம எதிரிகளான பாகிஸ்தானும் இந்தியாவும் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் இந்த ஆட்டத்தின் மீது திரும்பியது.

டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்

டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.

20 ஓவரில் 130 ரன்கள் எடுத்த பாக்.

20 ஓவரில் 130 ரன்கள் எடுத்த பாக்.

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 131 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

உமர் அக்மல் 33 ரன்கள்..

உமர் அக்மல் 33 ரன்கள்..

அந்த அணியில் உமர் அக்மல் 33 ரன்களும், ஷிஷட் 22 ரன்களும், மசூத் 21 ரன்களும் எடுத்தனர்.

மிஸ்ரா 2 விக்கெட்

மிஸ்ரா 2 விக்கெட்

இந்திய வீரர்களில் மிஸ்ரா 2 விக்கெட்டையும், புவனேஸ்குமார், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

18.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது இந்தியா

18.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது இந்தியா

பின்னர் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 18.3 ஓவரில் 131 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

கோஹ்லி 36, ரெய்னா 35 ரன்கள்..

கோஹ்லி 36, ரெய்னா 35 ரன்கள்..

இந்திய அணியில் அதிகபட்சமாக விராத் கோஹ்லி 36 ரன்கள், ரெய்னா 35 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 24 ரன்கள், தவான் 30 ரன்கள் எடுத்தனர். யுவராஜ்சிங் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பாகிஸ்தானின் அஜ்மல், உமர்குல், பிலாவல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்,

Story first published: Saturday, March 22, 2014, 9:31 [IST]
Other articles published on Mar 22, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+