Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை: முதல் போட்டியில் ஹாங்காய் அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி

நாக்பூர்: ஹாங்காய் அணிக்கு எதிரான உலக கோப்பை இருபது 20 தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது

நாக்பூரில் இன்று துவங்கிய .ஐசிசி உலக கோப்பை போட்டிதகுதி சுற்று போட்டிகளில் 'பி' பிரிவில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின.

ICC World T20: Zimbabwe beat Hong Kong by 14 runs

டாஸ் வென்ற ஹாங்காங் அணி கேப்டன் தன்வீர் பீல்டிங் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் பேட்டிங்கில் தடுமாறிய ஜிம்பாப்வே அணி 4.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், சுதாரித்து ஆடிய ஜிம்பாப்வே அணிக்கு சிபான்டா 46 பந்தில் 59 ரன்னும், சிகும்புரா அவுட்டாகாமல் 13 பந்தில் 30 ரன்னும் எடுக்க ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் அட்கின்சன் 44 பந்தில் 53 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். இதை பயன்படுத்தி 6-வது நபராக களம் இறங்கிய தன்வீர் அப்சல் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்தார்.

இருப்பினும் ஹாங்காங் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Friday, March 11, 2016, 14:01 [IST]
Other articles published on Mar 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+