For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசி.க்கு எதிராக அபார வெற்றி.. உலக டெஸ்ட் புள்ளி பட்டியலில் முன்னேறிய ஆஸி. இந்தியாவுக்கு ஆபத்தா?

WTC Table : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 162 ரன்களும், ஆஸ்திரேலியா அணி 256 ரன்களும் எடுத்தது.

இதனை அடுத்து 94 ரன்கள் பின் தங்கிய நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 372 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றியது.

ICC World test championship 2023-2025 - Australia goes Past NZ and finishes No 2


இந்த நிலையில் தற்போது தான் இந்திய அணி இங்கிலாந்தை நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் டெஸ்டில் வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கும் பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றி பெற்று இருப்பதால் புள்ளி பட்டியலில் முன்னேறி இருக்கிறது. எனினும் தற்போது புள்ளி பட்டியலில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலான செய்தி.

இந்திய அணி ஒன்பது போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி இரண்டு தோல்வி ஒரு டிரா என 68.5% முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி மூன்று தோல்வி ஒரு சமன் என 62.50 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. தற்போது தோல்வியை தழுவியுள்ள நியூசிலாந்து அணி 50 சதவீத புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

யாருமே எதிர்பார்க்காத வங்கதேச அணி 50 சதவீத புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் பாகிஸ்தான் அணி 36.6 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 33 சதவீதத்துடன் ஆறாவது இடத்திலும் தென்னாப்பிரிக்க அணி 25 சதவீதத்துடன் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 17.5 புள்ளி சதவீதத்துடன் எட்டாவது இடத்திலும், இலங்கை அணி 0 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 11, 2024, 13:05 [IST]
Other articles published on Mar 11, 2024
English summary
ICC World test championship 2023-2025 - Australia goes Past NZ and finishes No 2 நியூசி.க்கு எதிராக அபார வெற்றி.. உலக டெஸ்ட் புள்ளி பட்டியலில் முன்னேறிய ஆஸி. இந்தியாவுக்கு ஆபத்தா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+