For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் டெஸ்டில் இந்தியா தோல்வி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா?

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், நடப்பாண்டில் வெளிநாட்டில் ஒரு வெற்றியை கூட இந்திய அணி பெறவில்லை.

இது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் வாய்ப்பில் இடியாக இறங்கியுள்ளது.

தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இறுதி போட்டிக்கு செல்ல முடியுமா, இன்னும் எத்தனை போட்டிகள் இந்தியாவுக்கு உள்ளன என்பதை தற்போது காணலாம்.

முதல் 3 இடம்

முதல் 3 இடம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி தான் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி 77.78 சதவீதத்துடன் உள்ளது. 71.43 சதவீதத்துடன் தென்னாப்பிரிக்க அணி 2வது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும், 4வது இடத்தில் இந்தியாவும் உள்ளது.

எஞ்சியுள்ள போட்டி

எஞ்சியுள்ள போட்டி

தற்போது நியூசிலாந்து, இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் அடி தளத்தில் உள்ளது. அந்த அணிகளுக்கு இனி இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. ஆனால் இந்தியாவுக்கு இன்னும் இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது. இன்னும் இந்திய அணிக்கு 6 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன.இதில் 2 டெஸ்ட் போட்டி வங்கதேசத்துடன் உள்ளது.

இந்தியாவின் வாய்ப்பு

இந்தியாவின் வாய்ப்பு

மேலும் 4 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலிய அணியுடன் உள்ளது. இதில் எஞ்சிய 6 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு போட்டி மழையால் டிராவானால் கூட இந்திய அணியின் பைனலுக்கு செல்லும் வாய்ப்பு அவ்வளவு தான்.

இறுதிக்கு செல்வது யார்?

இறுதிக்கு செல்வது யார்?

இதில் 6 போட்டிகளுமே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆசிய மைதானங்களில் தான் நடைபெறுகிறது. இதில் இந்தியாவுக்கு சாதமாக அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு கடும் போட்டி அளிக்கும் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் தங்களுடைய டெஸ்ட் போட்டிகளில் தோற்க வேண்டும்.

Story first published: Tuesday, July 5, 2022, 19:07 [IST]
Other articles published on Jul 5, 2022
English summary
ICC World test championship 2023 – India chances for going in to final மீண்டும் டெஸ்டில் இந்தியா தோல்வி.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+